சிவகங்கை செப் 13 வைகையில் வெள்ளமென தண்ணீர் வந்த போதும் வைகை ஆற்றின் கரையில் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடித்து காவல்துறை,வருவாய்த்துறையிடம் மக்கள் ஒப்படைத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்க வில்லை என்று கிராம மக்கள் தெரிவிக்கின் றனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது தெ. புதுக்கோட்டை கிராமம். சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இக் கிராமத்தில், சேர்வைக்காரன் ஊரணி என்ற ஊரணி உள்ளது. இதில் ஒரு கரை சிவகங்கை மாவட்டத்திலும் மற்றொரு கரை ராம நாதபுரம் மாவட்டத்திலும் அமைந்துள்ளது. இந்த ஊரணி கரையை 12அடி ஆழத்திற்கு பொக்லைன் இயந்திரம் கொண்டு மணல் கொள்ளையர்கள் கிரவல் மணல் அள்ளி யுள்ளனர். இதனை அறிந்த தெ.புதுகோட்டை மற்றும் கோச்சடை கிராம மக்கள் 4 மணல் லாரிகளை சிறைப் பிடித்தனர். அவர்களிடம் முறையான அரசு உரிமம் இல்லை. மணல் கொள்ளையால் விவசாயம் பாதிப்பு இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரி வித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரி கள், கிராம மக்களிடம், விசாரணை மேற் கொண்டு வழக்குப்பதிவு செய்வதாக கூறி 4 மணல் லாரிகளையும் மானாமதுரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில் 4 மணல் லாரிகளையும் எவ்வித வழக்கு பதிவு செய்யாமலும் அதிகாரிகள் விடுவித்தது தெரியவந்துள்ளது. இதனை அறிந்த கிராமமக்கள் இரவு நேரங்களில் அதிக அளவில் மணல் திருட்டு நடைபெற்று வருவதாகவும், மணல் கொள்ளையர்களால் தோண்டப்பட்ட பெரியபள்ளங்களில் தண்ணீர் தேங்குவதால் தங்கள் விவசாய நிலத்திற்கு வரவேண்டிய தண்ணீர் பாதிக் கப்படுவதாகவும் கிராம விவசாயிகள் வேத னையுடன் தெரிவிக்கிறார்கள். மணல் கொள் ளையர்களை தடுக்க வேண்டிய அதிகாரி கள் கண்டுகொள்வதில்லை என்றும் குற்றம் சாட்டினர். தற்போது நீர்நிலைகளை சேதப்படுத்த துவங்கியுள்ள மணல் கொள்ளையர்களை பிடித்துக் கொடுத்தும் அதிகாரிகள் விடு வித்தது, தங்களுக்கு இந்த அதிகாரிகள் மீதி ருந்த நம்பிக்கை முற்றிலும் போய்விட்டதாக தெரிவிக்கின்றனர். அதிகாரிகளால் அரசுக்கு அவப்பெயர் அரசு சார்பில் பணியாற்ற வேண்டிய அதிகாரிகள் கனிம வள கொள்ளையர்க ளுக்கு சாதகமாக நடந்து கொள்ளும் போக்கை மாற்றாவிட்டால் அரசுக்கு அவப் பெயரை ஏற்படுத்தித்தரும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆண்டி கூறுகிறார். எனவே உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கை யாக உள்ளது.