districts

img

மதுரை சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்

மதுரை, அக்.1- மதுரை மாவட்டம் பரவை, சமயநல்லூர்,  சிக்கந்தர் சாவடி, கூடல்நகர், மேலப்பொன்ன கரம், பெத்தானியாபுரம் ஆகிய பகுதி மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு  முகாம் மதுரை பாத்திமாக்  கல்லூரியில் சனிக்கிழமையன்று  நடைபெற்றது. மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்  துறை மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்  முயற்சியால் நடைபெற்ற  முகாமில் 800 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயனைடைந்தார்கள்.  இதில் மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு. வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர்  மரு. எஸ். அனிஸ் சேகர், மாநகராட்சி ஆணையா ளர் சிம்ரன்ஜீத் சிங், மாற்றுத்திறனாளிகள் நல வாழ்வுத்துறை அதிகாரி இரா. இரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல்,  மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பி னர் இரா. விஜயராஜன்,  புறநகர் மாவட்டச் செய லாளர் கே. ராஜேந்திரன், மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. வசந்தன், ஜா.  நரசிம்மன், அ. கோவிந்தன், வை. ஸ்டாலின், டி.  செல்வா, பகுதிக்குழு  செயலாளர்கள் மேற்கு - 1  கு. கணேசன், வடக்கு - வி. கோட்டைச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஏ. பி. சிவ ராமன், ஏ. பாண்டி, புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் உமாமகேஸ்வரன், மாவட்டக்குழு  உறுப்பினர் பாலகிருஷ்ணன்,  தமிழ்நாடு  அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உரிமை கள் பாதுகாப்பு சங்கம் மாநிலச் செயலாளர் பி.  ஜீவா, மாநகர் மாவட்டத் தலைவர் பி. வீரமணி, செயலாளர் பாலமுருகன், பொருளாளர் மாரி யப்பன், காதுகேளாத வாய்பேசதோர் சங்க  பொறுப்பாளர்கள் சொர்ணவேல், பி. ஜோதி பாசு ஆகியோர் கலந்துகொண்டனர்.  

பயனாளி களுக்கு அடையாள அட்டை, பேருந்து, ரயில் பயண சலுகை அட்டை, மருத்துவ காப்பீட்டு அட்டை, நிவாரண உதவித் தொகை, சக்கர  நாற்காலி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. செயற்கை கை, கால் பொருத்து வதற்கான அளவிடுகள் எடுக்கப்பட்டது.  மதுரை மேற்கு ஒன்றியம்  யாதவர் கல்லூரி யில்  சனிக்கிழமையன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் 762 மாற்றுத் திறனாளிகளுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. .  முகாமில்  புதிய அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகளை வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர்  வழங்கினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ்  சேகர், கூடுதல் ஆட்சியர் சரவணன், மாற்றுத்  திறனாளிகள் நல அலுவலர் இரா.இரவிச்சந்தி ரன், ,சிபிஎம் புறநகர் மாவட்டச் செய லாளர் கே. ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்  எஸ்.பாலா, மேற்கு ஒன்றியச் செயலாளர் பி.ஜீவானந்தம், மற்றும் தாலுகாக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர்  கலந்துகொண்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கான கிட், சக்கர நாற்காலி, செயற்கைக்கால்  வழங்கப்பட்டன.