districts

img

மேற்குவங்க கல்வி அமைச்சரை கண்டித்து மதுரையில் மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுரை, மார்ச் 4-  மேற்குவங்கம் ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தில் மாணவர் பேரவைத் தேர்தல் நடத்திடக் கோரி  பல்கலைக் கழகத்தில் போராட்டம் செய்த மாணவர்கள் மீது மாநில காவல்துறை தடியடி நடத்தியது. இந்த நிலையில் இந்த பிரச்  சனை குறித்து மாநில கல்வி  அமைச்சரை சந்திக்க சென்ற இந் திய மாணவர் சங்க நிர்வாகிகள் மற்றும் மாணவர்களையும் சந்  திக்க மறுத்து அமைச்சர் காரின்  முன் நின்றிருந்த மாணவர்கள் மற்றும் மாணவர் சங்க நிர்வாகி கள் மீது காரை ஏற்றி படுகாயம டைந்தனர். அதில் இரண்டு மாண வர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்நிலையில் மாணவர்களை தாக்கி, அவமதித்த மேற்குவங்க கல்வி அமைச்சரை கண்டித்து மதுரை மாநகர் இந்திய மாணவர் சங்கம் சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை காமராஜர் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரி மற்றும் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூ ரிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மதுரை காமராஜர் உறுப்பு கல்லூரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் ரேகன் சுமன் தலைமை வகித்தார். மாநிலச் செய லாளர் அரவிந்த்சாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றி னார். மாநில துணைச் செயலாளர் க.பாலா, மாவட்டத் தலைவர் பா. சுபாஷ் மற்றும் கிளை நிர்வாகி கள் பாக்கியலட்சுமி, சக்திவேல், சரவணன், எம்.சந்தோஷ், சக்தி வேலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு கல்லூரி கிளை துணை பொறுப்பாளர் குரு கணேஷ் தலைமை வகித்தார். மதுரை மாநகர் மாவட்டச் செய லாளர் டேவிட் ராஜதுரை கண்டன  உரை ஆற்றினார். இதில் மதுரை மாநகர் மாவட்ட துணைச் செய லாளர் ரேகன் சுமன், கிளைச் செய லாளர் கருப்பையா, கிளை நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.