districts

img

மோடி அரசை கண்டித்து விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 4-  அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், செவ்வாய் அன்று திருச்சி புறநகர் மாவட்டம், வையம்பட்டி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் அருகில், சங்கத் தலைவர் ஆரோக்கியம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். பின்னர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையில், நிதி ஒதுக்கீடு குறித்து மாவட்ட ஆட்சியர் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மார்ச் 31 வரை வேலைக்கு வரும் அனைவருக்கும் தொடர்ந்து வேலை வழங்கப்படும். ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் வேலைக்கான அடையாள அட்டை வழங்குவதற்கு சொத்துவரி, குடிநீர் வரி உள்ளிட்ட இதர வரியினங்கள கட்டாயமாக வசூல் செய்வது நிறுத்தப்படும். 100 நாட்கள் பணி செய்த பணித்தள பொறுப்பாளர்களை மாற்றம் செய்து சுழற்சி முறையில் பணி நியமனம் செய்ய உறுதியளித்தனர்.  பேச்சுவார்த்தையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநில பொருளாளர் அ. பழநிசாமி, மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் த. ரஜினிகாந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் வெள்ளைச்சாமி, விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்டப் பொருளாளர் எம்.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.