districts

ஏப்ரல் 11-இல் கோட்டை முற்றுகை

மதுரை, ஏப். 4-  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்  மற்றும் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக் குழு கூட்டத்தில் ஜாக்டோ-ஜியோ சார்பில், முதல்வரின் தேர்தல்கால வாக்குறுதிகளான வாழ்வாதார கோரிக் கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 11-ஆம்  தேதி நடைபெறும் “கோட்டை முற்றுகை  போராட்டத்தில் “லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை பங்கேற்க வைப் பது முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் செவ்வாயன்று மாநில  அமைப்பாளர் தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்க  மாநிலத் தலைவர்  மு.அன்பரசு தலைமையில்  தமிழ்நாடு அரசு அனைத் துத்துறை ஊழியர் சங்கங்களின் போராட் டக்குழுக் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: சேலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பிரதிநிதித்துவ பேரவை முடி வின் அடிப்படையிலும், தமிழ்நாடு அரசு  அனைத்துத்துறை ஊழியர் சங்கங்க ளின் போராட்டக்குழு முடிவின் அடிப்ப டையிலும் ஏப்ரல் 19 அன்று நமது வாழ் வாதார உரிமை கோரிக்கைகளை வலி யுறுத்தி கோட்டை முற்றுகை போராட் டம் நடத்துவது முடிவெடுக்கப்பட்டிருந்தது.  இதற்கிடையில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்  மற்றும் உயாமட்டக்குழுக் கூட்டம்  ஏப்ரல் 2-ஆம் தேதி திருச்சிராப்பள்ளி யில்  நடைபெற்றது . அதில் முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறை வேற்ற வலியுறுத்தி ஏப்.11-ஆம் தேதி  கோட்டையை முற்றுகையிடும் போராட் டம் நடத்துவது, இந்த முற்றுகைப் போ ராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை பங்கேற்க வைப்பது என  முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக்  சங்க மாநிலப் பொதுச் செயலாளர் ஆ.  செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.