குழித்துறை, டிச. 6- சிபிஎம் 23ஆவது அகில இந்திய மாநாடு 2022 ஏப்ரல் மாதம் கேரள மாநிலம் கண்ணூரில் நடை பெற உள்ளது. அகில இந்திய மாநாட்டுக்கு முன்னோடியாக கிளை முதல் மாநில மாநாடுகள் வரை நாடு முழுவதும் நடத்தப் பட்டு வருகின்றன. கன்னியாகுமரி மாவட்ட மாநாடு வருகிற ஜனவரி 29, 30 தேதிகளில் குழித்துறை நக ரத்தில் பிரதிநிதிகள் , செம்படை அணிவகுப்புடன் நடைபெற உள்ளது. இம்மாநாட்டை சிறப்பாக நடத்த வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் மார்த்தாண்டத் தில் ஞாயிறன்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆர்.செல்ல சுவாமி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர் முகமது, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.வி. பெல்லார்மின், என்.முருகேசன், எஸ்.சி.ஸ்டாலின் தாஸ், எம். அண்ணாத்துரை, விஜயமோக னன், கே.மாதவன், எஸ்.ஆர்.சேகர்,கே.தங்கமோகன், வட்டார செயலாளர் வி.அனந்த சேகர், முன்னாள் நகர்மன்ற தலைவர் ஏ.எம்.வி.டெல்பின் ஆகியோர் உரையாற்றினர். பின்னர் 200 பேர்கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப் பட்டது. தலைவராக கே.மாத வன், செயலாளராக வி.அனந்த சேகர், பொருளாளராக மதன் மோகன்லால் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.