மதுரை, மார்ச் 4- தையல் தொழிலாளர் களுக்கு மாநில அளவில் முத்தரப்புக்குழு அமைத்திட வேண்டும்; தனி நிதியம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்; நலவாரிய உறுப்பினர் களுக்கு கட்டுமான நலவாரி யம் போல் பலன்களை உய ர்த்தி வழங்கிட வேண்டும். மாதந்தோறும் பென்சன் ரூ.3 ஆயிரம் வழங்கிட வேண் டும். விலையில்லா மின்சா ரம் வழங்க வேண்டும். வீடு இல்லாத தையல் தொழிலா ளர்களுக்கு வீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கை வலி யுறுத்தி சிஐடியு தையல் தொழிலாளர் சங்க மாநகர்-புறநகர் மாவட்டக் குழுக்கள் சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. எல்லீஸ் நகர் நலவாரி யம் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்டச் செயலா ளர் பி.சித்ரா தலைமை வகித் தார். சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் ஜே.லூர்துரூபி துவக்கி வைத்து பேசினார். சிஐடியு புறநகர் மாவட்டத் தலைவர் கண்ணன், தையல் தொழிலாளர் சங்க சம் மேளன நிர்வாகி பொன் ராஜ், மாவட்ட துணைச் செயலாளர் ராஜமாணிக் கம், தையல் தொழிலாளர் சங்க புறநகர் மாவட்டச் செய லாளர் கௌரி ஆகியோர் விளக்கி பேசினர். சிஐடியு புறநகர் மாவட் டச் செயலாளர் அரவிந்தன் நிறைவுரையாற்றினார்.