நாமக்கல், பிப்.19- விசைத்தறிக் கூடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தின ருக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண் டும் என வலியுறுத்தி, விசைத்தறித் தொழிலா ளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள ஒட்டன்கோவில் பகுதி யைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் விசைத்தறிக்கூடத்தில், ஆலங்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் பணிபுரிந்து வந்தார். கடந்தாண்டு அக்டோபர் மாதம் அருள்குமார் விசைத்தறிக் கூடத்தில் பணியிலிருந்தபோது, மின்சாரம் தாக்கி உயி ரிழந்தார். பணியின்போது தொழிலாளி உயிரி ழந்த நிலையில், தற்போது அவரது குடும்பத் தினர் வாழ்வாதாரத்திற்காக பெரும் சிரமப் பட்டு வருகின்றனர். எனவே, விசைத்தறிக் கூடத்தில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி, விசைத்தறித் தொழிலாளர் சங்கத்தினர் புத னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குமார பாளையம் அருகே உள்ள கல்லாங்காடு வலசு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, விசைத்தறித் தொழிலாளர் சங்க நகரத் தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். இதில், இடது தொழிற்சங்க மையத்தின் மாநில பொதுச்செயலாளர் ஏ.கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.