மதுரை, மார்.7- பெண்கள், குழந்தைகளு க்கு எதிரான குற்றங்களில் தீவிரமாக புலனாய்வு செய்து புகார் மீதான நட வடிக்கைகளுக்கு முக்கி யத்துவம் அளிக்க வேண்டும் என்று போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் காவல்துறையின ருக்கு அறிவுறுத்தினார். தமிழக காவல்துறை இயக்குனர் சங்கர்ஜிவால் தலைமையில் வியாழனன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மதுரை மாநகர், மாவட் டம், விருதுநகர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளு டன் ஆலோசனை நடை பெற்றது. முன்னதாக நிகழ்ச்சியில் டிஜிபி சங்கர் ஜிவால் பேசிய தாவது: சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றம் தடுப்பு குறித்து ஆய்வு நடத்தினோம். பொதுவாக சட்ட ஒழுங்கு குறித்து ஐஜி, எஸ்பி போ ன்றவர்கள் தான் ஆய்வு நட த்துவோம். தற்போது ஏடி எஸ்பி, டிஎஸ்பி அதிகாரிக ளுடன் ஆய்வு நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கோம். பெண்கள், குழந்தைக ளுக்கு எதிரான குற்றங்களில் தீவிரமாக புலனாய்வு செய்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். போ தைப்பொருள் குற்ற வழக்கு களில் தென்மண்டல காவல் துறை சிறப்பாக கையா ண்டுள்ளது. இருப்பினும் போதைப் பொருள் கடத்தல் விற்பனை குற்றங்களை குறைக்க தேவையான நடவடிக்கை களை எடுக்க வேண்டும். தற்போது இணைய வழிக் ்குற்றங்கள் அதிகமாக நடை பெறுகிறது. அதுபோன்ற குற்றங்களை தடுக்க விழிப்பு ணர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், ஒரு கால கட்டத்தில் சைபர் கிரைம் தொடர்பாக ஒரு வழக்கு என்ற பதிவான நிலையில், தற்போது 100 வழக்குகள் என பதிவாகிறது, குறிப்பாக ரவுடிகளை கட்டுப்படுத்து வதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அது தொடர்பான புகார் வழக்கு களை எப்படி கையாள்வது என்பது குறித்து அறிவுறுத் தப்பட்டிருக்கிறது. போதை பொருள்களை தடுப்பது முக்கியமான விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது அது தொடர்பான பல்வேறு அறிவுரைகளும் கொடுத்து வருகிறோம் மேலும் தீவிரப்படுத்த அறி வுரை வழங்கப்பட்டு வரு கிறது. காவல்துறையில் காவ லர்கள் நலன் குறித்து கூடுதல் கவனம் செலுத்த உள்ளோம். 26 கருத்துக்கள் அடிப்படை யில் காவலர் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர் வரை அவர்ளுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.