districts

img

கள்ளிக்குடியில் நெல்கொள்முதல் நிலையம் திறந்திடுக! பேருந்து வசதி செய்து தருக! பயிர்களை அழிக்கும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துக!!

கள்ளிக்குடி, (மதுரை) ஜூன் 8- மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். பொது சுகாதார வளாகம், பேருந்து வசதி  செய்து தர வேண்டும். பயிர்களை அழிக்கும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும் விவசாயிகளும் வலி யுறுத்தியுள்ளனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா விலிருந்து கள்ளிக்குடி தாலுகா அரசின் நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்டது. மதுரை-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ளது கள்ளிக்குடி. இங்கிருந்து தே.கல்லுப்பட்டி மார்க்கத்திலும் மற்றொரு மார்க்கத்தில் கூடக்கோவில் வரையிலும் தாலுகா உள்ளது.

தேவை பேருந்து வசதி
கூடக்கோவில், பாறைப்பட்டி, திரு மால், சமத்துவபுரம், வலையங்குளம், தூம் பக்குளம் உள்ளிட்ட சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த கிராம மக்கள் கள்ளிக்குடி தாலுகா  அலுவலகத்திற்கு வருவதற்கு இரண்டு பேருந்துகள் மாறி வருகின்றனர். தே. கல்லுப்பட்டி-கூடக்கோவில், கூடக்கோவில் தே.கல்லுப்பட்டி வழித்தடத்தில் பேருந்து களை இயக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் போக்குவரத்துக் கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

பொது சுகாதார வளாகம்
கள்ளிக்குடி பேருந்து நிலையத்தில் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு எந்த  வசதியும் இல்லை. மக்கள் என்ன செய்வார்கள் என்ற பார்வையும் மாவட்ட நிர்வாகத்திடம் இல்லை.

வியாபாரிகளிடம் சிக்கிக்கொண்ட விவசாயிகள்
கள்ளிக்குடியை சுற்றியுள்ள பகுதியில்  கம்பு, சோளம், துவரை, பருத்தி உள்ளிட்ட மானாவரி பயிர்கள் கண்மாய் பாசனங்களை நம்பியே விளைவிக்கப்படுகிறது. கூடக் கோவிலை சுற்றியுள்ள சில கிராமங்களில் நெல் பயிரிடப்படுகிறது. ஆனால், நெல் கொள்  முதல் நிலையம் திறக்கப்படவில்லை. கொடுக்  கப்பட்ட மனுவும் பெட்டிக்குள் அடைக்கல மாகிவிட்டது. கம்பு, சோளம், துவரை, பருத்தி உள்ளிட்ட மானாவாரி பயிர்களை வியாபாரிகளே கொள்முதல் செய்கின்றனர். வியாபாரிகள் சோளம் குவிண்டாலுக்கு ரூ.1,300 முதல்  1,400 வரையும் துவரைக்கு குவிண்டாலுக்கு  ரூ.3,000 முதல் ரூ.3,200-வரை கொடுக்கின்ற னர். அரசு கொள்முதல் செய்தால் சோளத்  திற்கு குவிண்டாலுக்கு ரூ.3,500-க்கு அதிக மாகவும், துவரைக்கு குவிண்டாலுக்கு ரூ. 6,500 கொடுக்க முடியும். தற்போது வியாபாரி கள் வைப்பது தான் விலை என்றாகிவிட்டது. சோளம் கொள்முதல் செய்வதற்கு கூட்டுறவு  சங்கங்கள் உள்ளன. அது வியாபாரிகளின் கொள்முதல் நிலையமாக மாறிவிட்டது. ஏழ்மை நிலையிலுள்ள விவசாயிகள் பத்து  மூடை சோளம் கிடைத்தால் அதை வியாபாரி களுக்கு விற்று காசாக்குகின்றனர். வியாபாரி கள் அதை கூட்டுறவு சங்கத்தில் இருப்பு வைத்து வெளிச்சந்தையில் விலை உய ரும்போது கூட்டுறவு சங்கங்களிலிருந்து சோளத்தை கொள்முதல் செய்கின்றனர்.

திருமங்கலம் பிரதானக் கால்வாய் நீட்டிப்பு
கள்ளிக்குடி பகுதிக்கு திருமங்கலம் பிர தானக் கால்வாயை நீட்டிக்க வேண்டும். தவிர மதுரை மாவட்டம் தே.குன்னத்தூர், கெஞ்சம்  பட்டி, வில்லூர், உவரி கிராமங்கள் வழியாக  முன்னாள் முதல்வர் காமராஜர் காலத்தில் நீட்டிப்புக் கால்வாய் உருவாக்கப்பட்டது. இந்தக் கால்வாயில் தண்ணீரே வருவ தில்லை.

காட்டுப்பன்றிகளால் தொல்லை
கள்ளிக்குடி சுற்றுவட்டாரப் பகுதியில் காட்டுப்பன்றிகளால் தொல்லை உள்ளது. பயிர்களை நாசம் செய்கின்றன. காட்டுப்பன்றி களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டுப் பன்றிகள் வரத் தொடங்கி விட்டன. இதையடுத்து பல்வேறு விலங்குகள் வரும் ஆபத்து உள்ளது.

சிறுமிக்கு 60 தையல்
கள்ளிக்குடி அருகே உள்ள லாலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் - ஸ்ரீதேவி தம்பதியினர் மகள் மகள் ரதி (13),  அங்குள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். அவர், தங்களது தோட்டத்  தில் ஆடுகளுக்கு தீவனங்களை வைத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது தோட்டத்திற்குள் கூட்டமாக வந்த காட்டுப்பன்றிகள், ரதியைத் தாக்கியது. இதில் அவருக்கு இடுப்பு, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது சிறுமி யின் அலறல் சத்தம் கேட்டு, தோட்டத்து வீட்டி லிருந்த பெற்றோர் ஓடி வந்து காட்டுப் பன்றி களை விரட்டி ரதியை மீட்டனர். இதையடுத்து வில்லூா் அரசு மருத்துவமனையில் முதலு தவி சிகிச்சைக்குப் பின், அவர் மேல் சிகிச்சைக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அங்கு சிறுமிக்கு கை, காலை  மற்றும் வயிறு பகுதிகளில் 60 தையல்கள் போடப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை
இப்படி கள்ளிக்குடி தாலு காவில் ஏராளமான பிரச்ச னைகள் உள்ளன. பிரச்சனை களை தீர்ப்பதற்கு மதுரை ஆட்சியர் அனீஷ்சேகர் நட வடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக பொதுசுகா தார வளாகம், கூடக்கோவில்-தே.கல்லுப்பட்டி வழித்தடத்தில் பேருந்து களை இயக்க வேண்டுமென கள்ளிக்குடி  தாலுகா செயலாளர் பி.ராஜேந்திரன் வலி யுறுத்தியுள்ளார். மானாவரி பயிர்களை நாசப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும். காட்டுப்பன்றி தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். மானாவாரி பயிர்களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். வியாபாரிகளின் பிடியிலிருந்து விவசாயி களை மீட்க வேண்டும் என மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் வலி யுறுத்தியுள்ளார்.