districts

img

சாரதா கிருஷ்ணா மருத்துவக் கல்லூரியில் ஓணவிழா கோலாகல கொண்டாட்டம்

குலசேகரம், செப்.12-   கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் ஓணம் விழா செப்.12 வியாழனன்று கொண்டாடப்பட்டது. கேரளத்திலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும்  வெகு விமர்சையாக கொண்டாப்படும் வண்ணமயமான ஓணம் விழா தொடங்கி நடைபெற்ற வருகிறது. இந்நிலையில், குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் இந்த விழா கோலாகலமாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் சி.கே. மோகன் தலைமை வகித்தார்.   கல்லூரி அறக்கட்டளை நிர்வாகிகள் சந்திரலேகா மோகன், பவ்யா, கல்லூரி முதல்வர் என். வி.சுகதன், கலை நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளர் கோகுல் கிருஷ்ணா, மாணவர் மன்ற தலைவர்  அர்ஜூன், மருந்துகாண் துறை பேராசிரியர் சதீஷ்குமார், முதுநிலை மாணவர்  தங்கம் ரவி. இளநிலை மாணவர் ஜீனா கேத்ரின் ஜான் ஆகியோர் பேசினர். தொடர்ந்து மெகா  திருவாதிரை நடனம், அத்தப் பூ கோலப்போட்டிகள், ஓணப்பாட்டு  மற்றும்  வடம் இழுத்தல், வழுக்கு மரம் ஏறுதல், களமடி உள்ளிட்ட  பல்வேறு விபோட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் மலையாள திரைப்பட நகைச்சுவை நடிகர் சுரேஷ் மற்றும் பண்பலை ஆர்.ஜே-க்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நகைச்சுவை மற்றும் பாடல்கள் பாடி சிறப்பித்தனர்.