districts

img

நாயக்கர்பட்டி - அரிட்டாபட்டி உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மதுரை நாயக்கர்பட்டி - அரிட்டாபட்டி உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பி.இளங்கோவன் தலைமை வகித்தார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் வி.உமாமகேஸ்வரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து விவசாயத் தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் பேசினார். கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் என்.பழனிச்சாமி, விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ஏ.விஜயமுருகன், மதுரை மாவட்டத் தலைவர் ஏ.வேல்பாண்டி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் துணைச் செயலாளர் எஸ்.மாயாண்டி ஆகியோர் பேசினர். விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் நிறைவுரையாற்றினார்.