மதுரை, பிப். 23- மதுரை மத்திய தொகுதி யின் சட்டமன்ற உறுப்பின ரும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சருமான முனைவர் பழனிவேல் தியாகராஜன், கடந்த 2016 ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலில் அளித்த வாக்குறுதியின் படி ஒவ் வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை தமது தொகுதி யில் தான் நிறைவேற்றிய திட்டப்பணிகள் குறித்து செயல்பாட்டு அறிக்கையை தொகுதியில் உள்ள அனை த்து வீடுகளுக்கும் கொண்டு சேர்த்து வருகிறார். அதன் அடிப்படையில் கடந்த 9 ஆண்டுகளாக தொட ர்ந்து தனது செயல்பாட்டு அறிக்கையை மதுரை மத்திய தொகுதி மக்களிடம் சமர்ப்பித்து வரும் அவர் 17 ஆவது செயல்பாட்டு அறிக்கையினை அமெரிக்க மிஷன் சர்ச் தெரு பகுதி யில் உள்ள மக்களிடம் வழங் கினார்.அதில் 6 மாதங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சாதனை படைத் துள்ளார். மேலும் மாற்று திறனாளிகளுக்கான நலத் திட்ட உதவிகள்,மீனாட்சி அம்மன் கோவிலில் அடிப்ப டைவசதிகள்,இ சேவை மையம் மூலம் சான்றுகள், தொகுதியில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்தி தந்துள்ளார். இந்த நிகழ்ச்சி யில் மேயர் இந்திராணி பொன் வசந்த், மண்டல தலைவர் பாண்டிச்செல்வி, மாமன்ற உறுப்பினர் கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.