புதுதில்லி, செப். 11 - மதுரை விமான நிலையம், இனி 24 மணிநேரமும் செயல்படும் என்று இந்திய விமான நிலையங்கள் ஆணை யம் தெரிவித்துள்ளது.
மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், தில்லி, மும்பைக்கு விமானங்கள் இயக்க ப்பட்டு வருகின்றன. அதேபோல் துபாய், சிங்கப்பூர், இலங்கை தலைநகர் கொழும்பு ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வரு கின்றன.
எனினும், காலை 6.55 மணி முதல் இரவு 9.25 மணி வரை மட்டுமே மதுரை விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. விமான நிலையத்தை வாரத்தில் 7 நாட் களும் 24 மணிநேரமும் இயக்க வேண்டும்; சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்பது மதுரை மக்களின் கோரிக்கையாகும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பொ. மோகன், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஆகியோர் இதற்காக தொடர்ச்சியாக முயற்சி மேற்கொண்டு வந்தனர். அண்மையில் மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), தங்க. தமிழ்ச்செல்வன் (தேனி), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), நவாஸ் கனி (இராமநாதபுரம்) ஆகிய தென் மாவட்ட எம்.பி.க்களையும் இணைத்துக் கொண்டு, ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடுவையும் சந்தித்து சு. வெங்கடேசன் எம்.பி. முறையிட்டார்.
இந்நிலையில் தான் தற்போது மதுரை விமான நிலையம் 24X7 என்ற அடிப்ப டையில் முழுநேரமாக செயல்பட இந்திய விமான ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. அத்துடன், இரவு 9.25 மணிக்கு பிறகு மதுரை விமான நிலையத்தில் இருந்து பிற இடங்களுக்கும், பிற நாடுகளுக்கும் விமானங்களை இயக்க பரிசீலனை செய்ய வேண்டும் என்று தனியார் நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் சு.வெங்கடேசன் நம்பிக்கை
விமான நிலையங்கள் ஆணையத்தின் செய்தியைக் குறிப்பிட்டு, தமது எக்ஸ் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ள சு.வெங்கடேசன் எம்.பி. “இந்திய விமானத்துறை, விமான நிறுவனங் களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மதுரை விமான நிலையம் அக்டோபர் இறுதி முதல் 24 மணி நேரமும் இயங்க உள்ளது. எனவே தங்களின் பயன்பாட்டு அட்டவணையை சமர்பிக்கச் சொல்லி கேட்டுள்ளது. விரைவில் மதுரை விமானநிலையம் 24 மணி நேரமும் இயங்கும் விமான நிலையமாக முறையாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன். மகிழ்ச்சி!” என்று குறிப்பிட்டுள்ளார்.