districts

மதுரை விரைவு செய்திகள்

ஆண்டிபட்டி கணவாய் பகுதியில்  அரசு பேருந்துகள் மோதி ஓட்டுநர் பலி

தேனி, ஜூன் 18- ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் இரண்டு  அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழந்  தார். மேலும் 47 பேர் படுகாயம் அடைந்தனர்.  ஜூன் 18 சனிக்கிழமையன்று  மாலை 4 மணி யளவில்  குமுளியில் இருந்து அரசு பேருந்து  ஒன்று நாகர்கோவில் நோக்கி சென்றது. இந்த பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பய ணித்தனர். மாலை 6.30 மணியளவில் ஆண்டி பட்டியை அடுத்துள்ள கணவாய் மலைச் சாலையில் சென்ற போது எதிரே மதுரையில் இருந்து தேனி நோக்கி வந்த மற்றொரு அரசு  பேருந்து எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் இரண்டு பேருந்து களின்  முன்பக்கமும் அப்பளம் போல நொருங்  கியது. பேருந்துக்குள் இருந்த இருக்கைகள்  உடைந்து நிலைகுலைந்தது. கண் இமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்தில்  இரண்டு பேருந்துகளிலும் பயணித்த 46க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.  இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும்  அங்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்க ளின் உதவியுடன் மீட்புபணியில் ஈடுபட்டனர். மழை பெய்து கொண்டிருந்ததால் மீட்பு பணி களில் ஈடுபட்டவர்கள் சிரமமடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டனர். இரண்டு  அரசு பேருந்துகளின் ஓட்டுநர்கள்  உள்ளிட்ட  5 பேர் பலத்த காயம் அடைந்ததால் அவர்கள்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இதில் நாகர்கோவில் அரசு பேருந்தை ஓட்டி  சென்ற கன்னியாகுமரி மாவட்டம் குறுவங் கோடு பகுதியை சேர்ந்த ஓட்டுநர் ரத்தினவேல் (41) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்  தார். அரசு பேருந்துகளில் பயணம் செய்த  தூத்துக்குடியை சோந்த சேரந்தையன்(47), கன்னியாகுமரியை சேர்ந்த மகேஷ்(48), சங்க ரன்கோவிலை சேர்ந்த மாரியம்மாள்(51), தேனியை சேர்ந்த கணபதி(48)  ஆகியோர் உள்பட 47 பேர் படுகாயம் அடைந்தனர். இதில்   மதுரையில் இருந்து தேனி வந்த அரசு பேருந்து  ஓட்டுநர் திருச்சுழியை சேர்ந்த மதுரைவீரன் (51) என்பவர் தீவிர சிகிச்சையில் உள்ளார். காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை தேனி மாவட்ட  ஆட்சியர் முரளீதரன் நேரில் சென்று பார்த்து  ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் வழங்குமாறு மருத்துவர்களுக்கு உத்தர விட்டார்.


நிலக்கோட்டை, கொடைரோட்டில் கனமழை  

சின்னாளபட்டி, ஜூன் 18- திண்டுக்கல் மாவட்டத்தில் காலை முதலே கடுமையான  வெயில் வாட்டி வந்தது.இந்நிலையில் மாலையில் நிலக் கோட்டை,கொடைரோடு, பள்ளப்பட்டி,சிலுக்குவார்பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக  இடியுடன் கூடிய பலத்த கனமழை கொட்டி தீர்த்தது இத னால் சாலைகளிலும் தெருக்களிலும் வெள்ளம் பெருக்கெ டுத்து ஓடியது. இந்நிலையில் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி இடையபட்டி பகுதியில் சாக்கடை நீருடன் கலந்த மழைநீர்  5-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் குடி யிருப்புவாசிகள் கடும் அவதியடைந்தனர். மேலும் ஒரு சிலர் சாக்கடை கால்வாய்நீர் வெளியேறும் பகுதியை அடைத்துள்ளதாகவும் இதனால் மழைவெள்ள நீர் வீடு களுக்குள் புகுந்ததாகவும் மக்கள் குற்றம்சாட்டினர்.


கலர்திரி, வெள்ளைத்திரி வைத்திருந்த 3 பேர் மீது வழக்கு

விருதுநகர், ஜூன் 18- விருதுநகர் அருகே ஓ.முத்துலாபுரம் பகுதியில் சட்ட  விரோதமாக எளிதில் வெடிக்க கூடிய திரிகளை தயாரித்த  3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விருதுநகர் அருகே உள்ள ஓ.முத்துலாபுரம் பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ராஜ்குமார் தீப்பெட்டி ஆலை அருகே சென்ற போது, மார்ட்டின்ராஜ், ராஜ்குமார், லாரன்ஸ் ஆகியோர் 100 குரோஸ் கலர் திரி,  150 குரோஸ் வெள்ளைத் திரிகளை அரசு அனுமதியின்றி வைத்திருந்தனர். இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீசார் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.