நீர்நிலை, அரசுப் புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றம் அலுவலர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை
தேனி, ஜூன் 17- தேனி மாவட்டத்தில் நீர்நிலைகள் மற்றும் அரசுப் புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் முன்னேற்றம் குறைவாக காணப்படுவதையடுத்து அலுவலர்களை தேனி ஆட்சியர் க.வீ.முரளீதரன் எச்ச ரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ; தேனி மாவட்டத்தில் உள்ள அரசு நீர்நிலைகள் மற்றும் அரசுப் புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்பான நடவடிக்கைகளில் நடப்பு மாதத் தில் (ஜூன்-2022) முன்னேற்றம் குறைவாக காணப்படுகிறது, அனைத்து அரசுத் துறை அலுவலர்கள் தங்கள் எல்லைக் குட்பட்ட பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு இனங்களில் 50 சதவீத இனங்களை நடப்பு மாதத்தில் அகற்றி அதன் அறிக்கையை புகைப்படத்துடன் அனுப்பி வைக்க வேண்டும், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடவடிக்கைகளில் சுணக்க நிலை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
நகை திருடியவர் கைது
அருப்புக்கோட்டை, ஜூன் 17- அருப்புக்கோட்டை முஸ்லிம் சின்னத் தெருவை சேர்ந்தவர் ஹப்சாமுஹரம்மா (22). இவர், தன்னுடைய கைப்பையில் 5 கிராம் தங்க கம்மல், ரூ.300 ஆகியவற்றை வைத்திருந்தாராம். அப்போது, அங்கு வந்த ஒரு பெண் வந்துள்ளார். அவருக்கு யாசகம் போட முயன்ற போது, கைப்பையை எடுத்துக் கொண்டு அவர் தப்பியுள்ளார். இதையடுத்து, ஹப்சா முஹரம்மா அவரை தேடிய போது அருகில் உள்ள தெருவில் பிச்சை எடுத்துக் கொண்டி ருப்பது தெரிய வந்தது. அவரைப் பிடித்து விசாரித்ததில் அவரது பெயர் தீபலட்சுமி (41) என்பது தெரியவந்தது. அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் ஹப்சாமுஹ ரம்மா புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீபலட்சுமியை கைது செய்தனர்.
அடையாள அட்டை வழங்கல்
திருவில்லிபுத்தூர், ஜூன் 17- திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் பாரதப் பிரதமர் ஊரகக் குடியி ருப்புத் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா திருவண்ணாமலை ஊராட்சியில் நடை பெற்றது அடையாள அட்டையை ஊராட்சி மன்றத் தலைவர் கே. மீனா கண்ணன் வழங்கினார் வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ.சிவக்குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.தனலட்சுமி, ஒன்றியப் பணி மேற்பார்வையாளர் சி. கிறிஸ்லின், வட்டார ஒருங்கிணைப்பாளர் முனியப்பன், ஊராட்சி செயலர் கே.முனியாண்டி மற்றும் வார்டு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.
ரயிலில் அடிபட்டு மயில் பலி
சின்னாளப்பட்டி, ஜூன் 17- திண்டுக்கல் - மதுரை மார்க்கமாக செல்லும் ரயில் பாதையில் கொடைரோடு அருகே சுமார் ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் மயில் அடிபட்டு இறந்தது. ரயில்வே காவல்துறையினர் சிறுமலை வனக்காப்பாளர் சங்கரிடம் ஒப்படைத்தனர்.
பேஸ்புக் மூலம் ரூ.36 லட்சம் மோசடி
தேனி, ஜூன் 17- தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் உள்ள கிருஷ்ணன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது உறவினர் முகநூல் கணக்கில் இவரைத் தொடர்பு கொண்டு எமிலிஜோன்ஸ் என்பவர் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளும்படி தெரிவித்தார். இதன்படி வாட்ஸ்அப்பில் பேசிய அவர், தான் அமெரிக்க ராணு வத்தில் சேர்ந்து சிரியாவில் செவிலியராகப் பணிபுரிவதா கவும், இங்குள்ள கலவரக்காரர்களிடம் இருந்து பெரும் தொகை கைப்பற்றப்பட்டு உள்ளது. அதனை ராணுவத்தினர் பிரித்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர். இதன்படி தனது பங்காக பல கோடி ரூபாய் வரும் என்ற தெரிவித்ததுடன் இவற்றை பத்திரமாக வைத்திருந்தால் 30 சதவீதம் கமிஷன் தொகை தருவதாகவும் கூறியுள்ளார். முருகானந்தனும் இதற்கு ஒப்புக் கொண்டார். தனது முகவரியையும் கொடுத்துள்ளார். சில நாட்களுக்கு பிறகு தில்லி விமானநிலையத்திலிருந்து பேசுவது போல ஒருவர் பேசி யுள்ளார். அதில் எமிலிஜோன்ஸ் பார்சல் அனுப்பி இருப்பதா கவும், அதற்கு வரி செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய முருகானந்தம் ரூ.8லட்சத்து 64ஆயிரத்து 790-ஐ அவர்கள் கொடுத்த வங்கிக் கணக்குக்கு அனுப்பி உள்ளார். பின்பு ஒவ்வொரு காரணமாக கூறியதால் மொத்தம் ரூ.36லட்சத்து 31ஆயிரத்து 16 செலுத்தி உள்ளார். அதற்குப் பிறகும் பணம் கேட்டுக் கொண்டே இருந்ததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து தேனி சைபர் கிரைமில் புகார் செய்தார். விசாரணை நடைபெறுகிறது.
டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம்
நரிக்குடி, ஜூன் 17- விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள சொட்டமுறி கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அங்காள பரமேஸ்வரி (39) என்பவர் நின்றுள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்த நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து ஐந்து பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இதுதொடர்பாக அங்காள பரமேஸ்வரி, நரிக்குடி காவல்நிலையத்தில் புகார் செய்தார். இந்நிலையில், சொட்டமுறி கிராமத்தில் அடிக்கடி பெண்களிடம் நகை பறிப்புச் சம்பவம் நடைபெறுவதாகவும், இதற்கு அப்பகுதியில் உள்ள அரசு மதுக் கடைக்கு மதுகுடிக்க வரும் சமூக விரோதிகள் தான். எனவே, கடையை அகற்ற வேண்டுமென வலியுறுத்தி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த நரிக்குடி காவல் ஆய்வாளர் இராம நாராயணன், கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கப்படு மென உறுதியளித்தார். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
வேகமெடுக்கிறது கொரோனா
மதுரை, ஜூன் 17- தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுப் பரவல் உயர்ந்து வருகிறது. வியாழக்கிழமை தினசரி கொரோனா பாதிப்பு 552- ஆக பதிவான நிலையில், வெள்ளிக்கிழமை பாதிப்பு 589- ஆக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளி யிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- தமிழகத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக 589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,59,586 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 286 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 38 ஆயிரத்து 026 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,313-லிருந்து 2,694 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து வெள்ளியன்று 208 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றிலிருந்து குண மடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,18,866 ஆக உள்ளது.
விவசாயிகள் குறைதீர் கூட்டம்
விருதுநகர், ஜூன்.17- விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக் கோட்டை, சாத்தூர் ஆகிய ஊர்களில் வருவாய் கோட்ட அளவில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் வரும் ஜூன் 21-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும். விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது
மதுரை, ஜூன் 17- மதுரை உயர்நீதிமன்றத்தில் ஜூன் 20-ஆம் தேதி முதல் முகக் கவசம் கட்டாயம் என நிர்வாக நீதிபதி பி.என். பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார். வழக்கு விசாரணைகளை மேற் கொள்ளும்போது நீதிபதி பி.என். பிரகாஷ் இந்த கருத்தைத் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது ஏற்கனவே மூன்று கொரோனா அலைகளைத் தாண்டிவிட்டோம், தப்பிவிட்டோம் நாம் இப்போது உயிரோடு பயணித்து இருக்கிறோம் என்று கூறியுள்ளார். இன்னும் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் ஆகவே பாதுகாப்பு கருதி 20-ஆம் தேதி முதல் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் வழக்குக்காக வரும் அனைவரும் நீதிமன்றத்தில் முகக் கவசம் அணியவேண்டும் என அறி வுறுத்தி இருக்கிறார். நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கிற்குச் சம்பந்தப்பட்டவர் மட்டுமே உள்ளே வரவேண்டும். வழக்கிற்கு சம்மந்தம் இல்லாதவர்கள் உள்ளே வருவதைத் தவிர்க்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். தமிழ கத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் முகக் கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மோடி அரசைக் கண்டித்து காங். ஆர்ப்பாட்டம்
தேனி/திண்டுக்கல்/விருதுநகர், ஜூன் 17- தில்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து தொண் டர்களை தாக்கிய காவல்துறையைக் கண்டித் தும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணையைக் கண்டித்தும் தேனி வருமான வரித்துறை அலுவலகம் முன் தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் முரு கேசன், மாவட்டப் பொருளாளர் பாலசுப்ரமணி யம், நகர் தலைவர் முனியாண்டி, வர்த்தக காங்கிரஸ் தலைவர் சங்கரநாராயணன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். திருவில்லிபுத்தூர் தலைமை அஞ்சல் அலு வலகம் முன்பு பட்சி ராஜா வி சி வன்னியராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் லட்சுமி மெடிக்கல் பெரியசாமி, தெற்கு வட்டார தலைவர் பால குருநாதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநிலச் செயலாளர் தமிழ்செல்வன் உட்பட ஏராளமா னோர் கலந்துகொண்டனர். திண்டுக்கல்லில் காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மூத்த காங்கிரஸ் உறுப் பினர் ராமு என்ற ராமசாமி பாய் தலையணையு டன் வந்து தலைமை தபால் அலுவலகம் முன்பாக படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.