districts

img

சிந்துவெளி பண்பாடு நூற்றாண்டு கருத்தரங்கம்

ஈரோடு, பிப். 19- தமுஎகச சார்பில். சிந்து வெளி பண்பாடு நூற்றாண்டு  கருத்தரங்கம் வி.பி.சி. நினை வகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங் கம் சார்பில், ஈரோடு மாவட்டம்,  வி.பி.சி. நினைவகத்தில் சிந்து  வெளி பண்பாடு நூற்றாண்டு கருத்தரங்கம் புதனன்று நடைபெற்றது. இந் நிகழ்விற்கு, தமுஎகச மாவட்டத் தலைவர் மு. சங்கரன் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் இ.கலைக்கோவன் வரவேற்றார். ‘சிந்துவெளி வந்த வழி’ என்ற தலைப்பில் மாநிலக்குழு உறுப்பினர் நவகவி கவிதை வாசித்தார். ‘சிந்துவெளி ஆய்வுகள்-புதிய  உண்மைகள்’ என்ற தலைப்பில் மானுடவிய லாளர் சீ.பக்தவச்சல பாரதி  சிறப்புரை யாற்றினார். ‘சிந்துவெளி நம்ம வெளி’ என்ற  தலைப்பில் மாநில பொதுச்செயலாளர் ஆத வன் தீட்சண்யா கருத்துரையாற்றினார். முடி வில், மாவட்டப் பொருளாளர் கி.கணேசன் நன்றி கூறினார்.