மதுரை, பிப்.14- முந்தைய அதிமுக ஆட்சியின் மெத்தனத்தால் மதுரை மாநக ராட்சியில் தணிக்கைத்தடை செய் யப்படாமல் சுமார் ரூ.4 ஆயிரம் கோடி நிலுவை உள்ளது என்று வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலு வையால் ஒன்றிய, மாநில அரசு களின் உள்ளாட்சி நிதியை பெறுவ தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து மதுரை கிருஷ்ணா புரம் காலனியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அலுவல ரான பி.ஆர்.தேசிகாச்சாரி, உள் ளாட்சி நிதி தணிக்கைத்துறை பொது தகவல் அலுவலரிடம் தகவல் அறி யும் உரிமைச் சட்டத்தின் கீழ் தக வல் பெற்றுள்ளார். அதில், 2009 - 2010 ஆம் ஆண்டு வரை சுமார் 4595 தணிக்கை தடை பத்திகளும் அதை உள்ளடக்கிய தொகை ரூ. 1330 கோடி நிலுவையாக இருப்ப தாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2010 - 2011 ஆம் ஆண்டு தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டு அந்த தொகையும் பெறப்படாமல் உள் ளது. அதனைத் தொடர்ந்து 2019 - 2020 ஆம் ஆண்டு வரை மட்டுமே சுமார் 8094 தணிக்கை தடை பத்தி களும் அதை உள்ளடக்கிய தொகை ரூ.2600 கோடி நிலு வையாக உள்ளது என்று அதிர்ச்சி யை உண்டாக்கும் தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது. “மொத்தமாக ரூ. 3923.03 கோடி நிலுவைத் தொகையை தணிக்கை தடை நிவர்த்தி செய்வதன் மூலம் மதுரை மாநகராட்சிக்கு மிகப் பெரிய வருவாய் வரும் வாய்ப்புள் ளது. மேலும் ஒன்றிய,மாநில அரசு களின் நிதியை எளிதில் பெறுவ தற்கு, மாநகராட்சி, குளறுபடிகள் அற்ற நிதி தணிக்கை அறிக்கை யை தாக்கல் செய்வது அவசியம். இந்த நிலுவைத் தொகை இன்று வரை கேட்பாரற்றுக் கிடக்கிறது. வசூல் செய்யக்கூடிய பெரும் தொகையை கண்டுகொள்ளாமல் மாநகராட்சி அதிகாரிகள் விட்டு விட்டனர். இதுகுறித்து பொது மக்க ளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த நிலுவைத் தொகையை வசூலித்தாலே போதும், பொதுமக்களுக்கு ஏரா ளமான திட்டங்களை மதுரை மாந கராட்சியால் செய்ய முடியும். மதுரை மாநகராட்சியில் நியாய மான பல்வேறு வகையான நிதி ஆதாரங்கள் இருந்தும் வருவாயை பெருக்க யாரும் முயற்சி செய்வ தில்லை.
தணிக்கைத்தடை என்றால் என்ன? |
மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு கட்டமைப்பு மற்றும் நடவடிக்கையும் முடிந்த பிறகு தணிக்கை செய்வார்கள். அப்படி தணிக்கை செய்யும் போது மாநகராட்சிக்கு ஏதேனும் இழப்புகள் ஏற்பட்டுள்ளனவா என்று பார்ப்பார்கள். அவ்வாறு இழப்பு ஏதும் இருந்தால், அதை முழு வதுமாக பதிவு செய்து, அதை தணிக்கைத் தடை என்று கொடுத்து விடு வார்கள். உதாரணமாக, மதுரை மாநகராட்சியில் ஒரு சாலையை ரூ.1 கோடிக்கு போடப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டு இருப்பின் அந்த சாலையின் நீளம், அகலம் மற்றும் தரம் கணக்கிடப்பட்டு அச்சாலையை போட ரூ. 75 லட்சம் மட்டுமே ஆகும். கூடுதலாக ரூ.25 இலட்சம் செலவு செய்தது தவறு என கூறுவதே தணிக்கை தடை எனப்படும். இது அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும், ஆண்டுதோறும் வரவு-செலவு கணக்குகளை தயார் செய்து, உள்ளாட்சி நிதி தணிக்கை துறையில் சமர்ப்பிக்கப்படுகிறது. தணிக்கை அறிக்கையின் மூலம் திட்டங்களில் உள்ள குளறுபடிகள், தேவையற்ற செலவினங்கள், முறைகேடுகள் உள்ளிட்டவை தெரியவரும். மதுரை மாநகராட்சியில் இதனை தயார் செய்வதற்கென, நிதித்துறையின் கீழ் செயல்படும் தனி அலுவலகம் மாநகராட்சி கட்டிடத்திலேயே இயங்கு கிறது. இந்த தணிக்கை தடையை நிவர்த்தி செய்ய வேண்டிய மதுரை மாநக ராட்சி ஆடிட்டர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 கோடி முதல் ஒன்றரை கோடி வரை சம்பளம் பெறுகின்றனர். 2009 முதல் 2010 வரை மதுரை மாநகராட்சி பொறுப்பில் திமுக இருந்துள்ளது. அதற்குப்பின் 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை அதிமுக இருந்துள்ளது. அதற்கு பின் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வில்லை. அப்பொழுதும் மாநில அதிமுக அரசு பல்வேறு மாநகராட்சி திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அதன்படி 2020 ஆம் ஆண்டு வரை மேற்கூறிய அடிப்படையில் எந்த ஒரு திட்டங்களுக்கான தணிக்கையும் செய்யப்படவில்லை. இதனால் மதுரை மாநகராட்சியில் தற்போதும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கு நிதி இல்லாமல் பெரும் நிதி நெருக்கடியில் செயல்பட்டு வரும் நிலையில் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் இவைகளை தணிக்கை செய்து அரசுக்கு சமர்ப்பித்தால் பெருவாரியான நிதி மாநகராட்சிக்கு வரும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. |
கடைகளை ஏலம் எடுத்தவர்கள் பல கோடி ரூபாய் பாக்கி
கடந்த சில ஆண்டாகவே மதுரை மாநகராட்சிக்கு வர வேண் டிய வருவாய் இனங்கள் சரியாக வசூல் ஆகாததாலும், எதிர்பார்த்த அளவுக்கு குத்தகை இனங்கள் விலை போகாதது, அப்படியே பெரிய அளவில் குத்தகை போனா லும், ஏலத்தொகை வசூல் ஆகா தது உள்ளிட்ட காரணங்களாலும் கடும் நிதி நெருக்கடியில் மாநக ராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. மதுரை மாநகராட்சியில் தகுதி உயர்வு உதவியாளர்கள் பணியிடத் திற்கு அரசாணையை மீறி ஊதியம் வழங்கியதும் தணிக்கையில் தெரியவந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமான நாளங்காடிகள், காய்கறி கடைகள், பாதையோர கடைகள், பூ மார்க்கெட், இறைச்சி அறுவைக் கூடங்கள், வாகன நிறுத்தக் கூடங்கள் ஆகியவற்றை ஏலம் எடுத்தவர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் வசூலாகாமல் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது” என்று பி. ஆர். தேசி காச்சாரி கூறுகிறார். மதுரை மாநகராட்சியில் தணிக்கை தடையில் சுமார் 3923 கோடி ரூபாய் தணிக்கை தடையாக வந்துள்ளது. மேற்கண்ட தொகை முழுவதும் தணிக்கை தடை செய் யப்படுமானால் குறைந்தபட்சம் 25 சதவீதமாவது மாநகராட்சிக்கு கிடைக்கும் சூழ்நிலை உள்ளது. உதாரணமாக, மதுரை மாநகராட்சி யில் பொறியியல் பிரிவு , வருவாய் பிரிவு, நகரமைப்பு பிரிவு போன்ற பிரிவுகளில் தணிக்கை தடைகள் நிறைய உள்ளன. வருவாய் பிரிவில் எடுத்துக் கொண்டால், மத்திய வருவாய் பிரி வில் மார்க்கெட் சம்பந்தப்பட்ட துறை களில் பெரும்பாலான தொகை மாநகராட்சிக்கு வர வேண்டி உள் ளது. அதே போல் மாநகராட்சியில் இருந்து வாடகைக்கு விடப்பட்ட பெரும்பாலான கடைகளில் வசூ லிக்கப்படாமல் உள்ளது. இத்த கைய சூழ்நிலையில் மாநகராட்சி மிக விரைந்து நடவடிக்கை எடுத் தால் மேற்கண்ட தொகையை முழு வதுமாக வசூல் செய்ய முடியும் என்றும் அவர் கூறுகிறார்.
அனுமதி பெறாத கட்டிடங்களுக்கு அபராதம் விதிக்கலாம்
நகரமைப்புப்பிரிவு அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடங்க ளுக்கு முறையாக நகரமைப்பு விதி களின்படி அபராதம் விதித்து, தொகை வசூலிக்கப்பட்டால் பல கோடிக்க ணக்கான ரூபாய் மாநகராட்சிக்கு வருமானமாக வருவதற்கு வாய்ப்பு கள் உண்டு. இந்த வருமானம் கிடைக்கும் நிலையில் மாநகராட்சி அன்றாடப் பணிகளான குடிநீர் விநியோகம் , சாலை பராமரிப்பு, சுகாதார பராமரிப்பு என அனைத் தும் நிதி நெருக்கடி இல்லாமல் மிக வும் நல்ல முறையில் செயல்படுத்து வதுடன் மாநகராட்சிக்கு வருவாய் இழப்போ, வருவாய் பற்றாக் குறையோ ஏற்படாமல் தவிர்க்க லாம்” என்று சமூக ஆர்வலர் ஹக் கீம் கூறுகிறார் .
தணிக்கைத்தடையால் அரசுகள் நிதி தருமா?
மதுரை மாநகராட்சியில் நிதி தணிக்கை, அதாவது ஒவ்வொரு ஆண்டும் செலவு செய்யப்படக் கூடிய அந்த வரவு-செலவு அறிக்கையை வருடாவருடம் தணிக்கை (ஆடிட்டிங்) செய்வார் கள். ஒன்றரை கோடி ரூபாய் மதிப் புள்ள சாலையை இரண்டு கோடி ரூபாய் உள்ளவாறு மதிப்பு காட்டி யிருந்தால், இது ஒன்றரை கோடி ரூபாய்க்கான சாலைதான் ; இரண்டு கோடிக்கு சாலையை கணக்கு காட்டியது தவறு என்பது தான் ஒரு தணிக்கை தடை. இப்படி மதுரை மாநகராட்சியில் கடந்த நிதி ஆண்டுகளில் பார்க்கும் பொழுது 12,689 தணிக்கை தடைகள் உள் ளன. இந்த தணிக்கை தடைகளில் மொத்தமான தொகையில் ஏறக் குறைய ரூ.3923 கோடிக்கு தணிக்கை தடை மதுரை மாநகராட்சி மீதம் வைத்துள்ளது. இந்தத் தணிக்கை தடைகளை ஒவ்வொன்றாக நிவர்த்தி செய்தால் தான் ஒன்றிய அரசும் மாநில அரசும் தொடர்ந்து நிதி வழங்கும். மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வாகியுள்ளது. இந்த தணிக்கை தடைகள் அதி கமான எண்ணிக்கையில் இருக்கும் பொழுது தொடர்ந்து ஒன்றிய, மாநில அரசுகள் நிதி தருவார் களா என்ற கேள்வி எழுகிறது என ஓய்வு பெற்ற வருவாய் ஆய்வாளர் யூசப் கான் கேள்வி எழுப்புகிறார். மதுரை மாநகராட்சி நிர்வாகம் சரிவர கையாண்டு வந்தால் தணிக்கை தடை என்பது எளிதில் நீக்கக்கூடிய ஒன்றுதான். மதுரை மாநகராட்சியின் வளர்ச்சித் திட் டங்கள் சரிவர நிறைவேறாமல் போவதற்கு இந்த தணிக்கை தடை பிரதான காரணமாக உள்ளது.
நிலுவைத்தொகையை வசூலிக்க தீவிரம்: ஆணையர்
இதுகுறித்து மதுரை மாநக ராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கூறுகையில், நீண்டகால மாக இந்த தணிக்கை தடை உள்ளது. இதில் உள்ள நிலுவைத் தொகை கணக்கிட்டு அதை வசூ லிக்கும் பணிகள் தற்பொழுது தீவி ரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே தணிக்கை தடை யை நிவர்த்தி செய்வதற்கு மாவட்ட அளவில் ஆய்வுக்கூட்டம் நடை பெறாமல் இருந்தது .தற்போது மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித் ததை தொடர்ந்து பிப்ரவரி மாதம் மீண்டும் தணிக்கை தடையை நிவர்த்தி செய்வதற்கு ஆய்வுக்கூட் டம் நடைபெறவுள்ளது. இந்த தணிக்கை தடையில் முறைகேடு ஏதும் நடைபெற்றிருக்க வாய்ப்பு இல்லை. இருப்பினும் ஏதேனும் முறைகேடு நடைபெற்று இருந் தால் உரிய நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என்று தெரிவித்தார். (ந.நி)