districts

img

மீண்டும் மீண்டும் அவமதிக்கும் ஒன்றிய பாஜக அரசு

மதுரை, டிச.21- மக்களவைச் செயலகம் வெளி யிட்டுள்ள காலண்டரில், தேசத்தந்தை காந்தியடிகள், அண்ணல் அம் பேத்கரின் படங்கள் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாகவும், இது  அவர்களை அவ மதிக்கும் மற்றும் வர லாற்றைத் திரிக்கும் திட்டமிட்ட செயல் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு. வெங்க டேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த காலண்டர்களைத் திரும்பப்  பெற்று, காந்தியார், அண்ணல் அம்  பேத்கர் படங்களை உள்ளடக்கிய புதிய காலண்டர்களை வெளியிடு மாறும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர்  மேலும் கூறியிருப்பதாவது:

அதிர்ச்சியளிக்கும் காலண்டர்

மக்களவை செயலகத்திலிருந்து 2025-ஆம் ஆண்டுக்கான மாதாந்திர  நாட்காட்டி உங்களின் கடிதத்துடன்  எங்களுக்கு அனுப்பிவைக்கப்பட் டுள்ளது.

இந்திய அரசமைப்பு சட்டத்தின் 75-ஆவது ஆண்டை கொண்டாடுவதன் வெளிப்பாடாகவும், அரசியல் சட்டத்தின் வரலாற்றுப் பயணத்தை நினைவு கூறும் விதமாகவும் இந்த  மாதாந்திர நாட்காட்டி உருவாக்கப்  பட்டுள்ளதாக நீங்கள் எழுதியுள்ளீர்கள்.

ஆனால், நீங்கள் அனுப்பிவைத் துள்ள மாதாந்திர நாட்காட்டி பெரும் அதிர்ச்சியைத் தருவதாக உள்ளது.

இந்திய அரசியல் சட்ட வரலாற்றுப்  பயணத்தை நினைவு கூறும் இந்த நாட்காட்டியில் தேசத்தந்தை அண் ணல் காந்தியாரின் படமோ, அரசியல்  சட்ட வரைவுக்குழுவின் தலைவர் அண்  ணல் அம்பேத்கரின் படமோ இல்லை.

bபங்களிப்பை மறைக்க முயற்சி

இந்த இருபெரும் ஆளுமைகளின் பங்களிப்பை மறைக்க ஒவ்வொரு நாளும் ஒன்றிய அரசு முயற்சி செய்து  வருகிறது.

நாடாளுமன்ற கட்டடத்தின் முன்பு றமிருந்த அண்ணல் காந்தியார், அண்  ணல் அம்பேத்கர் இருவரின் சிலை களை அகற்றி நாடாளுமன்றக் கட்ட டத்தின் பின்புறம் கொண்டுபோய் வைத்துள்ளீர்கள்.

இப்பொழுது இந்திய அரசியல் சட்டத்தின் 75-ஆவது ஆண்டை கொண்டாடுவதன் அடையாளமாக  சிறப்பு மாதாந்திர நாட்காட்டியை வெளியிட்டு அதில் இருபெரும் தலை வர்களின் படங்களோ, பெயர்களோ இல்லாமல் அச்சிட்டுள்ளீர்கள்.

காந்தி, அம்பேத்கர் விடுபட்டது எப்படி?

இந்த காலண்டரில் அரசியல் சாச னத்தை வரைந்த ஓவியர்கள், கையெ ழுத்து பிரதியாளர்கள் படங்களும் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. அவர்களின் பங்களிப்பு போற்றத்தக் கது, அங்கீகரிக்கப்பட வேண்டியது. ஆனால், அரசியல் சாசனத்தின் வரை வுக்குழுத் தலைவராக இருந்து பல் வேறு இடர்பாடுகளுக்கு இடையே அதற்கு வடிவம் தந்த அண்ணல் அம்  பேத்கரின் பெயர், படம் எப்படி விடுபட  முடியும்? 

இந்திய விடுதலைப் போராட் டத்தை ஓர் வெகுமக்கள் இயக்கமாக மாற்றிய தேசத்தந்தை காந்தியாரின் பெயரும் படமும் எப்படி விடுபட முடி யும்? இது வரலாற்றை திரிக்கும் திட்ட மிட்ட செயலாகும்; நவீன இந்தியாவை  உருவாக்குவதில் இவ்விரு பேராளு மைகள் நல்கிய அரும் பங்களிப்பை அவமதிக்கும் செயலாகும். 

புதிய காலண்டரை வெளியிடுக!

ஏற்கெனவே அண்ணல் அம்பேத் கர் பற்றி, உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட கருத்துக்கள் கோடானு கோடி மக்களின் மனத்தைப்  புண்படுத்தி உள்ளது. தற்போது இந்த  காலண்டர் மேலும் மக்கள் உணர்வு களை ரணமாக்க கூடியதாகும் என அஞ்சுகிறேன். பெரும் காயத்தை மக்கள் மனதில் இது உருவாக்கும்.  

உங்களின் இந்தச் செயல், இந்  திய அரசியல் சாசன வரலாற்றின் உரு வாக்கத்தை மேன்மைப்படுத்துவதாக இல்லை. மாறாக உங்களின் எண்ணம்  அதற்கு நேர் எதிராக செயல்பட்டி ருக்கிறது.  ஆகவே இந்த காலண்டரை திரும்பப்பெற்று தேசத்தந்தை காந்தி யார், அண்ணல் அம்பேத்கர் ஆகிய  இரு ஆளுமைகளுக்கும் உரிய இடம்  தருகிற புதிய காலண்டரை வெளி யிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி.  குறிப்பிட்டுள்ளார்.