districts

img

முதுகுளத்தூரில் வயல் தின விழா

இராமநாதபுரம், பிப்.23- இராமநாதபுரம் மாவட் டம் முதுகுளத்தூர் வட்டா ரத்தில் நெற்பயிர் முதன்மை  பயிராக சாகுபடி செய்யப்  பட்டு வருகிறது. நடப்பாண் டில் சுமார் 50,000 ஏக்கர் பரப்பில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை முடியும் தருவா யில் உள்ளது. இந்நிலையில் முதுகுளத்  தூர் வட்டார வேளாண்மை துறை மூலம் பிரபுக்களூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட முத்துவிஜயபுரம் கிராமத்தில் நெல் வயல்  தின விழா கொண்டாடப்பட் டது. இந்த நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்ட  வேளாண்மை உதவி  இயக்குநர் (தரக்கட்டுப் பாடு)  நாகராஜன்  தலைமை யில் நடைபெற்றது. முது குளத்தூர் வட்டார உதவி இயக்குநர் கேசவராமன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியின் போது, முதுகுளத்தூர் வட்டா ரத்தில் பயிரிடப்படும் பல்வேறு நெல் ரகங்கள் பற்றி யும், அவற்றின் குணாதிச யங்கள் பற்றியும் எடுத்துக்  கூறப்பட்டது. மேலும் முது குளத்தூர் வட்டாரத்தில் பெரும்பாலும் மழையை நம்பியே சாகுபடி செய் யப்படுவதால் குறைந்த வய துள்ள நெல் ரகங்கள் அதிக  அளவில் சாகுபடி செய்யப்  படுவதாக தெரிவிக்கப் பட்டது.  இந்த நிகழ்ச்சியில் ஊரக  வேளாண் அனுபவப் பயிற்  சிக்காக வந்திருந்த பேரை யூர் நம்மாழ்வார் வேளா ண்மை கல்லூரி மாணவர் கள், நெற்பயிரில் விதைப்பு  முதல் அறுவடை முடிய  உள்ள பல்வேறு வளர்ச்சி  நிலைகளில் கடைப்பிடிக் கப்படும் தொழில் நுட்பங் கள் குறித்தும் உரம் பூச்சி மருந்துகள் பயன்பாடு குறித்தும் விவசாயிகளிடம் கலந்துரையாடினர்.  நிகழ்ச்சியின் போது  முத்துவிஜயன், கிராமத் தைச் சேர்ந்த 40-க்கும் மேலான விவசாயிகள் கலந்து கொண்டனர். நிக ழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துணை வேளாண்மை அலு வலர் சீனிவாசன் மற்றும்  வட்டார தொழில்நுட்ப மேலா ளர் முனியசாமி மற்றும் ராஜேஷ் கண்ணன் ஆகி யோர் செய்திருந்தனர்.