districts

மதுரை முக்கிய செய்திகள்

இழப்பீடு கேட்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு  காத்திருப்பு போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

கரூர், மார்ச் 4-  மாயனூர் கதவணையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கரூர் மாவட்டம் மாயனூரில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கரூர் மாவட்டத் தலைவர் கே.கந்தசாமி, மாவட்டப் பொருளாளர் கே. சுப்பிரமணியன், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் ஏ.நாகராஜன் ஆகியோர் கூட்டத்தில் பேசினர்.  மாயனூர் கதவணை திட்டத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகையை வழங்காமல் ஆண்டுக் கணக்கில் பழிவாங்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், உடனடியாக இழப்பீடு தொகையை வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்ச் 13 ஆம் தேதி குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சாமி நடராஜன், மாநிலத் துணைத் தலைவர் கே. முகமதுஅலி ஆகியோர் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.   சங்க உறுப்பினர்கள் விஜயராகவன், முருகேசன், தண்டபாணி கரிகாலன், சேகர், சுபாஷ், தண்டபாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு விடுதி வசதி கோரி  இந்திய மாணவர் சங்கம் மனு

திருச்சிராப்பள்ளி, மார்ச் 4-  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இந்திய மாணவர் சங்க மாநகர் மாவட்டத் தலைவர் சூரியா தலைமையில், அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு விடுதி வசதிகோரி, அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்ட்டது.  அத்த மனுவில், திருச்சி மாவட்டம் காஜாமலை பகுதியில் அரசு சட்டக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய பல்வேறு மாவட்டத்தை சார்ந்த மாணவர்கள் சட்டப்படிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.  திருச்சி அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கென்று தனியாக எவ்வித விடுதி வசதியும் இல்லாத காரணத்தினால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளி மாவட்டத்தைச் சார்ந்த மாணவர்கள் அதிக அளவில் வாடகை செலுத்தி, வீடு எடுத்து தங்கும் நிலை உள்ளது. அதுமட்டும் இல்லாமல் ஒரு அறையில் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைந்து தங்கும் நிலைமை உள்ளது. இதனால், மாணவர்கள் மனதளவிலும் உடல் அளவிலும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கென்று விடுதி வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு மாணவர்கள் இலவச பேருந்தில் பயணிப்பது போல், திருச்சி அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாசை உடனடியாக வழங்க வேண்டும் என கூறியிருந்தனர். மனுவை கொடுத்தபோது, கிளைச் செயலாளர் அபிராமி, துணை பொறுப்பாளர் மணி ஆகியோர் உடனிருந்தனர்.

பெரிய கோவிலில் சித்திரைத் திருவிழா  பந்தல் கால் நடும் நிகழ்ச்சி

தஞ்சாவூர், மார்ச் 4-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை திருவிழாவுக்காகப் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா 18 நாட்கள் கொண்டாடப்படுவதும், 15 ஆம் நாளில் தேரோட்டம் நடைபெறுவதும் வழக்கம். இதன்படி, இக்கோவிலில் நிகழாண்டு சித்திரைப் பெருந்திருவிழாவுக்காக பந்தல் கால் நடும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கே. பூர்ண ஜெய ஆனந்த், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கோ. கவிதா, கண்காணிப்பாளர் சத்தியராஜ், மேற்பார்வையாளர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 23 ஆம் தேதி தொடங்குகிறது. முக்கிய விழாவான தேரோட்டம் மே 7 ஆம் தேதி நடைபெறுகிறது. இவ்விழா மே 10 ஆம் தேதி நிறைவடைகிறது.

ஜல்லி, எம்.சாண்ட் விலை உயர்வை கண்டித்து திருவாரூரில் உண்ணாவிரதம்

திருவாரூர், மார்ச் 4-  ஜல்லி, எம்சாண்ட் போன்ற கட்டுமான பொருட்களின் இரு மடங்கு விலை உயர்வை கண்டித்து கடந்ந 19-ஆம் தேதி முதல் திருவாரூர், நாகை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கட்டுமான பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் , தொழிலாளர்கள் இணைந்து விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக செவ்வாயன்று திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து 5,000-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள், தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திங்கட்கிழமை புதுக்கோட்டை ஜல்லி, எம் சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள் உயர்த்தப்பட்ட விலையில் இருந்து 20% குறைத்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இந்த கண்துடைப்பு அறிவிப்பை கைவிட்டு, முழுமையாக விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும், டிரான்சிட் பாஸ் முறையை ரத்து செய்ய வலியுறுத்தியும், முழக்கங்களை எழுப்பினர். ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் திரி சங்கு தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 5000-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

கோவில் உண்டியலை உடைத்து திருட்டு

புதுக்கோட்டை, மார்ச் 4-  புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே, தோப்புக்கொல்லையில் உள்ள சித்தி விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து திருடிய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தோப்புக்கொல்லை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள விநாயகர் கோவில் கதவின் பூட்டை உடைத்து, கடந்த 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த  உண்டியலை சனிக்கிழமை இரவு மர்ம நபர்கள், உடைத்து அதில் இருந்த காணிக்கைகளை திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வல்லத்திராகோட்டை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் ரத்து

ஸ்ரீவில்லிபுத்தூர், மார்ச் 4- விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் இ.குமாரலிங்க புரத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த வர் அஜிதா.  இவரை கடந்த 17ஆம் தேதி கனிமவள கடத்தலில் தொடர்பு இருப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் பணியிடை  நீக்கம் செய்தார். இதனைக் கண்டித்து அவரை மீண்டும்  பணியில் சேர்க்க வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்  கள் பல கட்ட போராட்டங்களை நடத்தினர்; வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில் வருவாய் நிர்வாக ஆணையர் தலை யீடு மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில  பொதுச் செயலாளர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேசியதன் பின்னணியில் சாத்தூர் வருவாய் கோட்டாட்சி யர் சிவக்குமார் சனிக்கிழமை அன்று கிராம நிர்வாக அலு வலர் அஜிதாவின் தற்காலிக பணியிடை நீக்கத்தை ரத்து  செய்து அவரை குமாரலிங்கபுரத்திலிருந்து குண்டல குத்தூர் கிராமத்திற்கு பணி மாறுதல் செய்து உத்தர விட்டார். அதன் அடிப்படையில் அஜிதா சாத்தூர் வட்டாட்சி யரிடம் கோட்டாட்சியரின் உத்தரவை காண்பித்து பணியில்  சேர்ந்தார்.  இதுகுறித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்டச் செயலாளர் வில்லியாழ்வார் கூறுகை யில், சாத்தூர் வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணி புரிந்த அஜிதாவின் தற்காலிக பணியிடை நீக்க உத்த ரவை வரவேற்கிறோம். இதற்கு ஒற்றுமையுடன் போராடிய  அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் நன்றியை  தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார். கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டதை ஒட்டி அவரோடு தற்காலிக பணியிட நீக்கம் செய்யப்பட்ட துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம உதவியாளரின் தற்காலிக பணி யிடை நீக்கமும் ரத்து செய்யப்பட்டு பணியில் சேர்ந்தனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

‘மார்ச் 15க்குள் குடும்ப அட்டை உறுப்பினர்களின் கைவிரல் ரேகை பதிவு செய்திட வேண்டும்

தேனி, மார்ச் 4- குடும்ப அட்டையில் உள்ள அனைத்து நபர்களின் கை விரல் ரேகையினை வருகிற 15 ஆம் தேதிக்குள் பதிவு  செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத்சிங் தெரி வித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, பொது  விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்கள்  சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி  செய்யும் நோக்கில், முன்னுரிமை குடும்ப அட்டை மற்றும்  AAY குடும்ப அட்டை வைத்துள்ள குடும்ப உறுப்பினர் களின் கைவிரல் ரேகை பதிவு செய்யும் பணி நடை பெற்று வருகிறது.   எனவே, தேனி மாவட்டத்தில் இதுவரை பதிவு செய்யாத AAY மற்றும் PHH குறியீடு பெற்ற அட்டை வைத்துள்ள குடும்ப அட்டைதாரர்கள், உடனடியாக சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று கைரேகை பதிவினை பதிவு செய்திட வேண்டும். மேலும், தேனிமாவட்டம் / மாநிலத்திற்கு வெளியே பிற மாநிலங்களில் பணிபுரியும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அவர்கள் தற்காலிகமாக தற்போது வசிக்கும் மாவட்டம் / மாநிலத்தில் அருகில் உள்ள நியாயவிலைக்கடைகளில் IMPDS  e-KYC மூலம்  தங்களது கைரேகைப் பதிவினை 15.3.2025 ஆம் தேதிக்குள்  பதிவு செய்ய வேண்டும்.

குழந்தையில்லை எனத் திட்டியதால் பெண் தற்கொலை

 திருச்சுழி, மார்ச் 4- திருச்சுழி அருகே குழந்தைப் பேறு இல்லையென கணவர் மற்றும் உறவினர்கள் திட்டியதால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். மதுரை மாவட்டம், மதிச்சியம் பகுதியைச் சேர்ந்தவர்  மணிகண்டன். இவரது மகள் யோக பிரதீபா(20). இவ ருக்கும் தச்சனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி  என்பவருக்கும் 2024 ஜன.21 இல் திருமணம் நடை பெற்றுள்ளது. இந்நிலையில், முத்துப்பாண்டி மற்றும் அவரது உறவினர்கள் யோகபிரதீபாவிற்கு குழந்தை இல்லையென தொடர்ந்து திட்டியதாக கூறப்படுகிறது. இத னால் மனமுடைந்த அவர் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் அ.முக்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். 

குடிநீர் விநியோகத்தில் குளறுபடி நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

ஸ்ரீவில்லிபுத்தூர், மார்ச் 2- ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு பகுதியான ஆராய்ச்சி பட்டி, திரௌபதி அம்மன்  கோவில் தெரு மக்களுக்கு கடந்த 3 மாத காலமாக நக ராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்த பகுதிக்கு குடிநீர் விநியோகம் பத்து நாட்க ளுக்கு ஒரு முறை தான் செய்யப்படுகிறது. ஆனால் இதே வார்டிலுள்ள அடுத்த தெருக்களில் சீரான குடிநீர் விநியோகம் வழங்கப்படுவதாக ஆராய்ச்சி பட்டி, திரௌபதி அம்மன் கோவில் தெரு பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தங்களது பகுதிக்கு 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர்  விநியோகம் வந்தாலும் 2 மணி நேரம் மட்டுமே திறக்கப்படு கிறது. இதனால் தேவையான குடிநீரை சேகரிக்க முடிய வில்லை.  இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் சீரான குடி நீர் வினியோகம் செய்யப்படவில்லை. எனவே, நகர குடிநீர் வழங்கல் துறையும் நக ராட்சி ஆணையாளரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குடிநீர் விநியோகத்தில் பாகுபாடு காட்டும் போக்கை கைவிட்டு சீரான விநியோகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.