சின்னாளப்பட்டி, பிப்.23- காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்க லைக் கழகத்தின் தமிழ் மற்றும் இந்திய மொழிகள் புலத்தின் சார்பில் உலகத் தாய்மொழி நாள்விழா தமிழ்த்துறையின் குறள் அரங்கத்தில் நடைபெற்றது. பல்கலைத் துணைவேந்தர் பேரா.ந. பஞ்சநதம் தலைமை வகித்தார். தமிழ்த்துறைத் தலைவர் பேரா.பா. ஆனந்தகுமார் வரவேற்று பேசினார். தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேரா.கோ.பாலசுப்ரமணியன்சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், “தமிழ்மொழியின் தனித் தன்மை என்பது அதன் பழமையில் மட்டு மல்லாமல், காலந்தோறும் தன்னைத் தக வமைத்துக் கொள்ளும் அறுபடாத் தொடர்ச்சியில் உள்ளது. தாய்மொழியைப் பாதுகாப்பது, அதைத் தொடர்ந்து பயன்படுத்தும் விதத்தில் அடங்கியுள்ளது. இன்றைய இளந்தலைமுறையினர் புல னம், முகநூல் போன்ற இணைய ஊட கங்களைப் பயன்படுத்தும்போதும் வங்கி படிவம் போன்றவற்றிலும் முற்றிலும் தமி ழைப் பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். நாம் தமிழ் மொழிப் பயன்பாட்டைப் பொது ஊடகங்களில் தவிர்க்கும் போது மொழியின் எதிர்காலம் பாதிக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இளந்தலைமுறையினர் இயன்ற அளவு பொது ஊடகங்களில் தமிழைப் பயன் படுத்த இந்தத் தாய்மொழி நாள்விழாவில் உறுதியேற்க வேண்டும்” என்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் துறையின் முன்னாள் இயக்கு நர் பேரா.ராஜசேகரன் நாயர் தனது உரையில், “ஆங்கிலத்திற்கு இணையான கலைச்சொற்கள் தமிழில் உருவாக் கப்படுவதைப் போல மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் உரு வாக்கப்படுவதில்லை. அதற்கான முயற்சி கள் அந்தந்த மொழியியல் வல்லுநர்களால் முன்னெடுக்கப்பட வேண்டும்” என்றார். திண்டுக்கல் கனரா வங்கியின் ஹிந்தி அலுவலர் சந்தீப்பன் தார் சௌத்ரி, மலை யாள ஆய்வுகள் மைய இயக்குநர் பேரா.ஷாஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பேராசிரியர் பா.ஆனந்தகுமார், முனைவர் கி.சிவா ஆகியோரால் தொகுக்கப்பட்ட காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்க லைக்கழகத்தின் இளங்கலை மாண வர்களுக்கான இலக்கியத் திரட்டு என்னும் பாடநூல் துணைவேந்தரால் வெளியி டப்பட்டது. உலகத் தாய்மொழி நாளையொட்டி தமிழ் மற்றும் இந்திய மொழிகள் புலத்தால் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நிகழ்ச்சி யில் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வின் இறுதியில் தாண்டிக்குடி பகுதியைச் சேர்ந்த பளியர் என்னும் பழங்குடி இன மக்களின் இன்னிசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்தித் துறைத் தலைவர் பேரா.சலீம் பெய்க் நன்றி கூறினார்.