மதுரை, பிப். 23- ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பை கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில், மதுரை தெற்குவாசல் கிரைம் பிராஞ்ச் பகுதியில் ஞாயிறன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திராவிடர் கழக துணை தலைவர் கலி.பூங்குன்றன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுரேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் எடிசன் ராஜா, மாவட்ட நிர்வாகிகள் முருகானந்தம், எரிமலை, மதிமுக நிர்வாகி மகபூப் ஜான், அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் பசும்பொன் பாண்டியன், மாநில சட்டத்துறை துணை செயலாளர் கணேசன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் வா.நேரு ஆகியோர் பேசினர். மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.