மதுரை, செப். 13- அகில இந்திய பொதுச்செய லாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை யில் உடல்நல குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் செப் - 12 வியாழனன்று மாலை சிகிச்சை பலனன்றி காலமானார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை மாநகர் மாவட்டத்தில் பகுதி குழுக்கள் சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது .மத்திய -1ஆம் பகுதிக்குழு சார்பில் 56வது வார்டு தூக்குமேடை தியாகி பாலு படிப்பகம் முன்பாக அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பகுதிக்குழு செயலாளர் வை.ஸ்டா லின், மாமன்ற உறுப்பினர் வை. ஜென்னியம்மாள், சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் சி.ராசமாணிக்கம், பகுதிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பகுதிகுழுவில் கிளைகள் சார்பில் மார்க்சிம் கார்கி. காஸ்ட்ரோ படிப்பகங்கள், மேல அண்ணா தோப்பு, பொன்னகரம் ஏ. கே. ஜி படிப்பகம், 57 வது வார்டு ஜானகி யம்மாள் மன்றம், தூக்கு மேடை தியாகி பாலு படிப்பகம், 59 வது வார்டு சிங்காரபுரம், 60வது வார்டு எல்லீஸ் நகர், 61வது வார்டு எஸ். எஸ். காலனி, மகபூப்பாளையம் ஜின்னா திடல் ஆகிய இடங்களில் மறைந்த தோழர் சீதாராம் யெச்சூரி உருவ படத்திற்கு அஞ்சலி செலுத் தப்பட்டது.
தோழர் சீத்தாராம் யெச்சூரி மறைவுக்கு வடக்கு -1ஆம் பகுதி குழு சார்பாக செல்லூர் தாகூர் நகர், பாக்கியநாதபுரம் அசோக் நகர், அருள்தாஸ் புரம், வைத்திய நாதபுரம் பகுதிகளில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் பகுதி செயலாளர் வி. கோட் டைச்சாமி. மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் க.திலகர், பா. பழனி யம்மாள் மற்றும் கட்சி முன்னணி தோழர்கள் கலந்து கொண்டனர்.
வடக்கு - 2 பகுதிகுழு சார்பில் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் பங் கேற்கும் அஞ்சலி நிகழ்ச்சி சி.பி.எம் பகுதி குழு செயலாளர் ஏ பாலு தலைமையில் மீனாம்பாள்புரம் கலையரங்கில் நடைபெற்றது. இதில் மாநில குழு உறுப்பினர் விஜயராஜன்,மாவட்ட குழு உறுப்பி னர்கள் கே. அலாவுதீன், மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல், வி. கோட் டைச்சாமி, எஸ். வேல் தேவா, மதிமுக வழக்கறிஞர் நாகராஜன், திமுக மாமன்ற உறுப்பினர் முரளி கணேஷ், அதிமுக மாமன்ற உறுப்பினர் ஏ. மாணிக்கம், தமிழ் தேசிய குடியரசு கட்சி தலைவர் மெய்யப்பன் தோழர் சீத்தாராம் யெச்சூரி உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
மேற்கு - 1 பகுதிகுழு சார்பில் பாண்டியராஜபுரம், லுமும்பா படிப்பகம், பாலு படிப்பகம், கோச் சடை, ஜானகி நகர், சம்மட்டிபுரம், சொக்கலிங்க நகர், பழங்காநத்தம் பாரதி படிப்பகம், பைக்கரா, பாண்டி யன் நகர் கிளை உள்ளிட்டு 12 இடங்களில் சீத்தாராம் யெச்சூரி உரு வப்படம் வைத்து மாலை அணி வித்தும் மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடை பெற்றது. பகுதிகுழு செயலாளர் கு.கணேசன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் ஏ.பி. சிவராமன், பி. மல்லிகா மற்றும் பகுதிகுழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மேற்கு - 2 ஆம் பகுதிகுழு சார்பில் தியாகி சங்கரலிங்கனார் கிளையில் சீத்தாராம் யெச்சூரி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் பகுதி குழு செயலாளர் ஏ. எஸ். செந்தில்குமார், துணை மேயர் தி. நாகராஜன் மற்றும் பகுதிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.