நாகர்கோவில். நவ. 2- ஆரல்வாய்மொழி காவல் துறை யினர் தலித் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து நடத்திய அத்துமீறலை செல்போனில் படம் பிடித்த கல்லூரி மாணவி உட்பட 3 பேர் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியுள்ள னர். காயமடைந்த மூவரும் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல் வாய்மொழி பகுதிக்கு உட்பட்டது எம்.ஜி.ஆர் நகர். ஆதிதிராவிடர் சமூகமக்கள் வசிக்கும் பகுதியாகும். நவம்பர் 1ஆம் தேதி இரவு அப்பகு தியை சார்ந்த இரு இளைஞர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இத்தகவலை அறிந்து ஆரல்வாய் மொழி காவல் உதவி ஆய்வாளர் மகேந்திரன், காவலர் செந்தில் ஆகி யோர் இருசக்கர வாகனத்தில் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு 30-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கூடியிருந்த நிலையில் அப்பகு தியை சார்ந்த இளந்திரையன் மகன் மதன்குமார் (24), என்பவரை தனது கையில் வைத்திருந்த இரும்பு கம்பால் காவல்துறையினர் தாக்கி யுள்ளனர். இதில் அவருக்கு ரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. காவல் துறையின் கொலைவெறி தாக்கு தலை நேரில் பார்த்துக் கொண்டிருந்த மதன்குமாரின் சகோதரியும், கல்லூரி மாணவியுமான சுவேதா (21).என்பவர் தடுக்கமுயன்ற போது, இவரை உதவி ஆய்வா ளர் தனது கையில் இருந்த இரும்பால் தாக்கியதில் வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காவலர் செந்தில்,மாணவியை பிடித்து இழுத்து கீழே தள்ளியுள்ளார். இதில் அவரது இடும்பில் பலந்த காயம் ஏற்பட்டுள்ளது. கேள்வி கேட்ட கிருஷ்ணன் மகள் மஞ்சு (22) என்ப வரையும் தனது கையில் வைத்தி ருந்த கம்பால் தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த மூவரையும், பொதுமக்கள் 108-ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்துள்ளனர். தற்போது மூவரும் உள்நோயாளி யாக சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறையின் அத்துமீறலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது. இதுகுறித்து கட்சி யின் தோவாளை வட்டாரக்குழு செய லாளர் எஸ்.மிக்கேல் கூறுகையில், ஆரல்வாய்மொழி காவல்துறையின ரின் செயல் வெந்தபுண்ணில் வேலினை பாய்ச்சுவதாக உள்ளது. கல்லூரி மாணவி உட்பட 3 பேரை கொடூரமாக தாக்கிய காவல் துறை யினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.