மதுரை, அக்.7- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் - கலைஞர்கள் சங்க மதுரை மாந கர், புறநகர் மாவட்டக் குழுக்கள் சார்பில் மறைந்த தோழர் ந.ஶ்ரீதர் படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. அ.ந.சாந்தா ராம் தலைமை வகித்தார். மதுரை நாடாளுமன்ற மன்ற உறுப்பினரும், தமுஎகச மாநில மதிப்புறு தலைவருமான சு.வெங்க டேசன் தோழர் ஶ்ரீதர் படத்தை திறந்து வைத்து மாலை அணி வித்து பேசினார். முன்னாள் மாநிலத் தலை வர்கள் பேரா.அருணன், மாநில துணைத் தலைவர் வெண்புறா, மாவட்டத் தலைவர் கா.இளங்கோ, செயலாளர் ஶ்ரீரசா, புறநகர் மாவட்டச் செயலாளர் மீ.லெனின் மற்றும் மணிவண்ணன், அம்பிகா, பழனிவேலு, மார்க்சிஸ்ட் கட்சி மதுரை மாநகர் மாவட்டச் செயலா ளர் மா.கணேசன் ஆகியோர் பேசி னர். இராயப்பன், கவிஞர் மனோந் திரா மற்றும் ஶ்ரீதர் புதல்வன் சசி, புதல்வி சூர்யா ஆகியோர் பங்கேற்றனர்.