நாகர்கோவில், செப்.24- அரசு தொடக்க, நடு நிலைப்பள்ளி களின் தரத்தை நேரில் சென்று ஊராட்சி தலைவர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இது குறித்து அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெற உள்ள கிராமசபை கூட்டத்தில் விளக்க வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். வீடில்லாதவர்களை கணக் கெடுக்க வேண்டும். இலவச வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கான தொகை உரிய முறையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் கேட்டுக்கொண்டார். குமரி மாவட்ட ஊராட்சி தலைவர்க ளுடனான ஆலோசனைக் கூட்டம், நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளியன்று (செப்.23) நடை பெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியர் அரவிந்த் தலைமை தாங்கி மேலும் பேசியதாவது: தமிழகத்தில் ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைய வேண்டும். அதற்கு ஊராட்சி தலைவர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் ஆகும். கிராம ஊராட்சிகள் சுகாதாரமான முறையில் இருக்க வேண்டும்,
குப்பைகள் இல்லாத கிராமங்கள் உருவாக வேண்டும். தெருக்களில் குப்பைகள் கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். நம்ம ஊர் சூப்பரு திட்டத்தின்கீழ் அனைத்து கிராமங்க ளும் முழு சுகாதார வசதியுடன் இருக்க வேண்டும். பொது இடங்கள், பள்ளி, ஊராட்சி அலுவலகம், நூலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், பொது கழிவறை மற்றும் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தல், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை, குப் பைகளை தரம் பிரித்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொது இடங்களில் வளர்ந்துள்ள செடி களை அகற்ற வேண்டும். மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில் சுத்தம் செய்து தேதியை குறிப்பிட வேண்டும். பொது இடங்களில் குப்பை கள் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகளில் குப்பை களை பெறும் போதே தரம் பிரித்து பெற வேண்டும். இது தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை ஊராட்சி தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும். 2022-23, 2023-24 ஆம் ஆண்டுக்கான 15ஆவது மாநில நிதிக்குழு பணிகளை திட்டமிட வேண்டும் என ஆட்சியர் கூறினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் குமரி மாவட்டம் முழுவ தும் உள்ள ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.