வேடசந்தூர், ஜூன் 11- வேடசந்தூர் அருகே தனி யார் மில்லில் மேற்கூரை அமைக்கும் பணியின்போது தவறி இயந்திரத்தில் விழுந்த சென்னையைச் சேர்ந்த தொழிலாளி சிகிச்சை பல னின்றி இறந்தார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த ராமதாஸ் (48). இவர் திண்டுக்கல் மாவட்டம் வேட சந்தூர் அருகே உள்ள கோட் டையூரில் எவரெடி என்ற தனி யார் நூட்பாலையில் தங்கி கட்டிடத்தில் ஆஸ்பெட்டாஸ் மேற்கூரை அமைக்கும் பணி யில் ஈடுபட்டார். கடந்த 9 ஆம் தேதியன்று வழக்கமாக மேற் கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ராமதாஸ் எதிர்பாராத விதமாக 50 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே இருந்த இயந்திரத்தின் மீது விழுந்து படுகாயமடைந்தார். மில் நிர்வாகத்தினர் ராம தாசை திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்த்த னர். தீவிர சிகிச்ச்சை பெற்று பின்னர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார்.இந்நிலை யில் சிகிச்சை பலனின்றி இறந் தார். இறந்த தொழிலாளி ராம தாசுக்கு யசோதா என்ற மனை வியும், நிவேதா என்ற மக ளும், அரவிந்பாலாஜி என்ற மகனும் உள்ளனர். இது குறித்து வேடசந்தூர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) சத்தியபிரபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த ராமதாசுக்கு விபத்து ஏற்பட்டவுடன் குடும் பத்திற்கு உடனடியாக தெரி யப்படுத்தாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர். ராமதாஸ் இறப்பில் மர் மம் உள்ளது என்றும் தனியார் மில் நிர்வாகத்தின் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் பெரிய சாமி தலைமையில் உறவி னர்கள் வேடசந்தூர் காவல் நிலையத்தை முற்றுகை யிட்டு புகார் செய்தனர். அஜாக்கிரதையாக செயல்பட்ட மில் நிர்வாகத் தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர் கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.