districts

சிபிஎம் ஊழியர்கள் மீது பாஜக தாக்குதல் : 11 பேர் காயம்

திரிபுரா, செப்.22- தெற்கு திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் மீது பாஜக-வினர் புதனன்று நடத்திய தாக்கு தலில் 11 பேர் காயமடைந்தனர்.  தெற்கு திரிபுராவில் உள்ள கோமதி மாவட்டத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான மாணிக்சர்க்கார் பங்கேற் கும் பேரணியில் கலந்துகொள்வதற்காக வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்களது வாகனத்தை மறித்து  பாஜக-வினர் கற்களாலும், கம்புகளாலும் மார்க்சிஸ்ட் கட்சியினரை தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் 11 பேர் படுகா யம் அடைந்து மாவட்ட அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் அம்ரித் சாதன் ஜமாத்தியா-வும் ஒருவர். காய மடைந்தவர்களை மாணிக்சர்க்கார் மருத்துவமனையில் சென்று பார்த்து சம்பவம் குறித்துக் கேட்டறிந்தார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் பாஜக-வின் மக்கள் விரோதக் கொள்கை களை அம்பலப்படுத்தி திரிபுராவில் பேரணி-பொதுக்கூட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நடத்தி வருகிறது.  இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் பாஜக-வினர் தாக்குதல் நடவடிக்கை களில் ஈடுபடுகின்றனர். தங்களது கட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. மக்கள் தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற அச்சத்தில் உள்ள பாஜக வன்முறையில் ஈடுபடுவதாக முன்னாள் அமைச்சர் நரேஷ் ஜமாத்தியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.