விருதுநகர், ஜூலை 17- விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், எலுமிச்சங்காய்பட்டி அருகே ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்பட்ட இலவச பட்டா நிலத்தில் தனிநபர் ஆக்கிர மித்து விவசாயம் செய்வ தாக மாவட்ட ஆட்சியரிடம் பயனாளிகள் புகார் மனு அளித்தனர். சாத்தூர் அருகே உள் ளது அமீர்பாளையம். இப் பகுதியைச் சேர்ந்த ஆதி திராவிடர்கள் தங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி மனு அளித்தனர். இதையடுத்து, கடந்த 2021இல் வெம் பக்கோட்டை வட்டம், எலு மிச்சங்காய்பட்டி பகுதியில் 56 பேருக்கு தலா 3 சென்ட் வீதம் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது. இந்த நிலையில், தனி நபர் ஒருவர் அரசு சார்பில் ஊன்றித் தரப்பட்ட கற்களை பிடுங்கி விட்டு, அந்த இடத்தில் விவ சாயம் செய்கிறார். எனவே, எங்களது நிலத்தை மீட்டுத் தருவதோடு, அனைவருக் கும் வீடுகள் வழங்கும் திட்டத் தின் கீழ் வீடுகட்ட நிதி வழங்கி டுமாறும் கோரிக்கை மனு வழங்கினர்.