districts

img

மாசாத்தியார் பள்ளியில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மதுரை துணை மேயர் ஆய்வு

மதுரை. ஜூன் 15- மதுரை 47 ஆவது வார்டு தெற்கு வாசல், வைக்கோல்கார தெருவில்  அமைந்துள்ள மாசாத்தியார் பெண் கள்  மேல்நிலைப்பள்ளியில்  கட்டிடங்கள் சீரமைப்பு மற்றும் அடிப்படை கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்த மதுரை  மாநகராட்சி சார்பில் 45 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் மதுரை துணை மேயர் டி.நாகராஜன், அப்பகுதி மாமன்ற உறுப்பினர் பானு முபாரக் மந்திரி, மாநக ராட்சி உதவி ஆணையாளர் சுரேஷ்  ஆகியோர் ஜூன் 15 அன்று பள்ளியில்  ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது  மாற்றுத் திறன் கொண்ட மாணவர் களுக்கான பள்ளி வளாகத்தை மாற்ற வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் கோரிக்கை வைத்தது.  பள்ளி கட்டிடம் கட்டி 65 ஆண்டு களுக்கு மேலாக  ஆகிவிட்ட நிலையில், அதனை சீரமைத்து மாணவர்களுக்கு தேவையான மின்வசிறி மற்றும் பள்ளி  கட்டிட விரிவாக்கம் உள்ளிட்ட ஆலோச னைகளை  துணை மேயர் நாகராஜன் வழங்கினார் .  மத்தி - 2 பகுதிக்குழு செயலாளர் (பொறுப்பு) பி. கோபிநாத், மாவட்டக்  குழு உறுப்பினர் யு. எஸ். அபுதாகீர், வாலிபர் சங்க பகுதிக்குழு தலைவர் சதாம் உசேன், செயலாளர் போனிஃ பேஸ், மாணவர் சங்க  மாநில துணைத்  தலைவர் நிருபன் சக்கரவர்த்தி, மாநகர்  மாவட்டத் தலைவர் க. பாலமுருகன், செயலாளர் எஸ். வேல்தேவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  மாசாத்தியார் பள்ளியில் கட்ட மைப்பு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,  இந்திய மாணவர் சங்கம் ஆகி யவை சார்பில் தொடர்ந்து கோரிக்கை  வைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக் கது.