இராஜபாளையம், பிப்.23- மத்திய அரசு இந்தியை கட்டாயமாக்கும் நோக்கில் மும்மொழி கொள்கையை தமிழகத்தில் திணிக்க முயற் சிக்கும் செயலை கண்டி தும், தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க வலி யுறுத்தியும் இராஜபாளை யத்தில் அனைத்துக் கட்சி கள் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஜவகர் மைதானத்தில் ஞாயிறன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திராவி டர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் கோவிந்தன் தலைமை தாங்கினார். சிபிஎம் நகரச் செயலாளர் சுப்பிரமணியன், சிபிஐ மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ரவி, மதிமுக நகரச் செயலாளர் மதியழ கன், காங்கிரஸ் நகரத் தலை வர் சங்கர் கணேஷ் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் சார்பில் மூத்த தோழர் கணேசன், சிபிஐ நகரச் செய லாளர் விஜயன், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் திருப்பதி, தமிழ் புலிகள் சார்பில் தமிழரசன் உட்பட அனைத்துக் கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.