districts

6 ஆண்டுகள் 8 மாதங்களுக்குப் பிறகு சோழவந்தான் பாலம் பணிகள் நிறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க வாய்ப்பு

சோழவந்தான், பிப்.27- மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில் கடவுப்பாதை உள்ளது. இது அமைந் துள்ள சாலை வழியாக வாடிப்பட்டி, நகரி  உள்பட 12 கிராமங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இந்த ரயில்வே கடவுப் பாதை வழியாக அதிகமான ரயில்கள் சென்று வருவதால் அடிக்கடி இது மூடப்  படுகிறது. இதனால் வாகனங்கள் மணிக்க ணக்கில் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே இங்கு ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டுமென்று பொதுமக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. மதுரை-சென்னை இருப்புப்பாதை வழித்தடத்தில் சோழவந்தான் உள்ளதால் இங்குள்ள கடவுப்பாதை நாளொன்றுக்கு 40 முறையாவது பூட்டப்படும்
எத்தனை போராட்டங்கள்
இந்த பாலம் பணிகள் கிடப்பில் போடப்  பட்டுள்ளதைக் கண்டித்து 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி நாற்று நடும் போராட்டம், அதைத் தொடர்ந்து மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் உருண்டு கொடுக்கும் போராட்டம், அதைத்  தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட கால இடை வெளியில் மூன்று போராட்டங்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி யுள்ளது. கட்சியின் வாடிப்பட்டி ஒன்றி யக்குழு மாநாட்டிலும் பாலத்தை விரைவா கக் கட்டி முடிக்கக் கோரி தீர்மானம் நிறை வேற்றப்பட்டு அரசின் கவனத்திற்கு அனுப்  பப்பட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வராக ஜெயலலிதா பொறுப்பிலி ருந்தபோது அடிக்கல் நாட்டப்பட்ட இந்தப்  பாலத்தைக் கட்டி முடிப்பதில் அதிமுக அரசு  அலட்சியமாகவே இருந்தது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் பாலம் வேலைகள் துரிதப்பட்டது. கிட்டத்தட்ட ஆறு  ஆண்டுகள் எட்டு மாதங்கள் முடிவுற்ற நிலை யில் இந்தப் பாலம் பணிகள் மார்ச் 4-ஆம்  தேதிக்குள் நிறைவடைந்து மதுரைக்கு வருகை தரும் முதல்வர் மு.கஸ்டாலின் மார்ச் 5-ஆம் தேதி திறந்து வைக்க வாய்ப் புள்ளது.