மதுரை, பிப்.25- உயர்நீதிமன்றங்கள், உச்சநீதி மன்றத்தில் நீதிபதிகளை தேர்வு செய்வதற்கு தனி அமைப்பு, தனிச் செயலகம், ஊழியர்கள் தேவை. அந்த அமைப்பும் ஒளிவு மறைவின்றி வெளிப்படைத்தன் மையுடன் செயல்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு கூறினார். மதுரையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பிப்ரவரி 25 சனிக்கிழமையன்று “நீதிபதிகள் நியமனமும்; சவால் களும்” என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு கருத் துரையாற்றினார். அவர் பேசிய தாவது: இன்றைக்கு ஆளுநர் தாம் விரும்புவதையெல்லாம் பேசு கிறார். அரசியலமைப்புச் சட்டத் தின்படி ஆளுநரை கேள்வி கேட்க வும் உரிமை உண்டு. ஆளுநர் தன் னிச்சையாக செயல்பட முடியுமா என்ற கேள்வி முன்பே எழுந்துள் ளது. மாவட்ட நீதிபதி ஒருவரை ஆளுநர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மாற்றி விட்டார். இது நீதிமன்றத்திற்கு வருகிறது. இந்த வழக்கை விசாரித்தவர்கள் ஏழு நீதிபதிகள், அதில் ஒருவர் நீதிபதி கிருஷ்ணய்யர். விசாரணையின் முடிவில் அவர், ஆளுநர் என்ப வர் அமைச்சரவையின் ஆலோ சனையின்படி தான் செயல்பட முடி யும். அதை மீறி அவர் செயல்பட முடியாது எனக் கூறினார். அவ ரது கருத்தை அனைத்து நீதிபதி களும் ஏற்றுக்கொண்டனர். நீதியை விற்க மாட்டோம், நீதி யை மறுக்க மாட்டோம், நீதி வழங்குவதை தாமதிக்க மாட்டோம் என்பது தான் நீதித்துறையின் தாத்பரியம். இது இன்றைக்கு பெரும்பாலும் நடைமுறையில் இல்லை.
அதற்கு பல்வேறு கார ணங்கள் உள்ளன. அரசியலமைப்புச்சட்டம் என் பது அரசியலை உள்ளடக்கியதாது தான். அரசியலை பிரித்துவிட்டு அரசியலமைப்புச் சட்டத்தைப் பார்க்க முடியாது. அரசியல மைப்புச் சட்டத்தைப் புரிந்து கொண்டவர்களை நீதிபதியாக்கி உள்ளோமா என்ற கேள்வியும் எழு கிறது. ஒருவர் நீதிபதியாவதற்கு முன் எந்த அரசியலமைப்பிலும் இருக்க லாம். அவர் நீதிபதியான பின் அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பது தான் முக்கியம்.உயர்நீதிமன்ற நீதி பதியாவதற்கு முன் அதற்காக அனுப்பப்பட்ட பரிந்துரைப் பட்டிய லில எனது பெயரும் இருந்தது, வழக்கறிஞர் விஜயன் பெயரும் இருந்தது. உளவுத்துறை குறிப்பும் அதில் இடம் பெற்றிருந்தது. எனது குறிப்பில் உள்ளூர் தீவிர வாதி, சர்வதேச தீவிரவாதி எனக் குறிப்பிட்டிருந்தனர். வழக்கறிஞர் விஜயனின் குறிப்பில் இட ஒதுக் கீட்டிற்கு எதிராக வாதாடியவர், வழக்கு தொடுத்தவர், சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பு அரசியலை கக்கியவர் என எழுதியிருந்தனர். இந்தத் தருணத்தில் எனக்கு உயர்நிதிமன்ற நீதிபதி பொறுப்பு வழங்கப்பட்டது. ஏனெனில் எனது குறிப்பில் அப்படிக் கூறப்பட்டவர் களின் வழக்குகளில் ஆஜராகி வாதாடினேன். ஆனால், விஜ யனோ, அரசியல் சாசன அமைப் பிற்கு எதிராக வாதாடுபவர், வெறுப்பு அரசியல் பேசியவர் என்பதற்காக நிராகரிக்கப்பட்டார். அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கையில்லாதவர்களை நீதிபதிகளாக்கக்கூடாது. ஒருவர் மாவட்ட முன்சீப் ஆவ தற்கு அரசு நடத்தும் தேர்வை எழுத வேண்டும். அதில் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற்றாலும் பெற்ற மதிப்பெண், இனச் சுழற்சி, இட ஒதுக்கீடு இவற்றில் எல்லாம் வெற்றி பெற்றாலும் காவல்துறை யின் உளவுப் பிரிவு அளிக்கும் குறிப்பும் கவனத்தில் கொள்ளப் படும்.
மாவட்ட முன்சீப் ஆவதற்கு இவ்வளவு நடைமுறைகள் உள் ளன. ஆனால், உயர்நீதிமன்ற நீதி பதிகள், உச்சநீதிமன்ற நீதிபதியாவ தற்கு எதுவும் இல்லை. கொலிஜி யம் என்ற அமைப்பை வைத்துள்ள னர். இது மிகவும் ரகசியமானது. அவர் எப்படி நீதிபதியானார், எதற் காக ஆக்கப்பட்டார் என்பது குறித் தெல்லாம் தெரியாது. அறிவிக்கப் பட்டபின்னர் தான் அவரைப் பற்றி தெரிந்துகொள்ள முடியும். அப்ப டித்தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கௌரி நியமிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ரஞ்சன்கோகய் இன்று நாடாளுமன்ற உறுப்பினராகி விட்டார். அவரிடம் நீதிமன்றங்க ளில் ஊழலே இல்லையெனக் கூற முடியுமா என செய்தியாளர் ஒரு வர் கேட்டபோது, அவர் “இல்லை யென்று” பதிலளிக்கவில்லை. நீதிபதிகளே நீதிபதிகளை நிய மித்துக் கொள்ளும் விந்தை இந்தி யாவைத் தவிர வேறெங்கும் இல்லை இப்படி நியமிப்பது அரசிய லமைப்புச் சட்டத்தை இயற்றிய அம்பேத்கருக்கு இழைக்கப்படும் துரோகமாகும். உயர்நீதிமன்றங்கள், உச்சநீதி மன்றத்தில் நீதிபதிகளை தேர்வு செய்வதற்கு தனி அமைப்பு, தனிச் செயலகம், ஊழியர்கள் தேவை. அந்த அமைப்பும் ஒளிவு-மறை வின்றி வெளிப்படைத்தன்மை யுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கருத்தரங்கத்திற்கு அகில இந் திய வழக்கறிஞர்கள் சங்க மாநிலச் செயலாளர் எல்.ஷாஜி செல்லன் தலைமை வாகித்தார், மாநிலக்குழு உறுப்பினர் சீனிவாச ராகவன் வர வேற்று பேசினார் இதில் மாநில துணைத் தலைவர் என். முத்து அமுதநாதன், மாவட்டச் செயலா ளர் சவுரிராமன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மா. கணேசன், வழக்கறிஞரும் மதுரை துணை மேயருமான டி.நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட னர்.