districts

img

மாநில ஜிம்னாஸ்டிக் போட்டியில் மதுரை பள்ளி மாணவி தங்கம் வென்றார்

மதுரை, செப் 14-  மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் மதுரை மாநகராட்சி பள்ளி யை சேர்ந்த 10 வயது மாணவி தங்கம் பதக்கம் வென்று சாதனை படைத் தார்.  தமிழ்நாடு அமெச்சூர் ஜிம்னாஸ் டிக் சங்கம் மற்றும் தமிழ்நாடு ஜம்ப் ரோப் சங்கம் சார்பில் மாநில அளவி லான ஜிம்னாஸ்டிக் மற்றும் ஜம்ப்ரோப் போட்டிகள் செப்டம்பர்  10ஆம் தேதி அன்று தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடை பெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 300 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.   6 முதல் 19 வயது வரையில் மாணவர்களுக்கு 6 பிரிவுகளிலும், மாணவி களுக்கு 4 பிரிவுகளிலும் போட்டிகள் நடந்தன. இதில் பெண்களுக்கான பத்து வயது பிரிவில் மதுரை மஞ்சணக்கார மாநகராட்சி பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி ஜாபினா  ரீமாஷ் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார்.  எதிர்காலத்தில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் இந்தியா வுக்காக  ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு நாட்டிற்கு பெருமை சேர்ப்பதே ஆசை என்று ஜாபினா  ரீமாஷ் கூறினார்.