மரத்தடியில் பேன்சி ரக வெடிகள் தயாரிப்பு: ஒருவர் மீது வழக்கு
ஏழாயிரம்பண்ணை, பிப்.23- விருதுநகர் மாவட்டம், ஏழாயிரம்பண்ணை அருகே மரத்தடியில் பேன்சிரக வெடிகளை தயாரித்தவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஏழாயிரம்பண்ணை போலீசார் சேர்வைக்காரன்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள தனியார் பட்டாசு ஆலை அருகே சென்ற போது, சட்டவிரோத மாக மரத்தடியில் 12 சாட் வெடிகள் தயாரிப்பது தெரிய வந்தது. எனவே, அவற்றை பறிமுதல் செய்த போலீ சார், இது தொடர்பாக மார்க்கநாதபுரத்தைச் சேர்ந்த மான்ராஜ்(34) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசா ரிக்கின்றனர்.
அனுமதியின்றி பட்டாசு திரிகள் வைத்திருந்தவர் மீது வழக்கு
விருதுநகர், பிப்.23- விருதுநகர் அருகே அனுமதியின்றி பட்டாசு திரி களை கொண்டு சென்றவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆமத்தூர் காவல்நிலை சார்பு ஆய்வாளர் விஜய குமார் தலைமையிலான போலீசார் ஜி.என்.பட்டி பகுதி யில் ரோந்து சென்றனர். இந்நிலையில், செங்குன்றாபுரம் புதூரைச் சேர்ந்த பிரேம்குமார்(30) என்பவர் அரசின் அனு மதி மற்றும் உரிமம் ஏதுமின்றி மிசின் திரிகள் 5 கட்டு வைத்தி ருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீ சார் பிரேம்குமார் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
பணம், நகை திருடியவர் கைது
விருதுநகர், பிப்.23- விருதுநகர் அருகே வீட்டில் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவற்றை திருடியவரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் அருகேயுள்ள கருப்பசாமி நகரைச் சேர்ந்த வர் லட்சுமணன்(65). இவரது வீட்டில் தங்கமணி காலனி யைச் சேர்ந்த காயத்திரி (35) என்பவர் பணிப் பெண் ணாக சேர்ந்துள்ளார். இந்த நிலையில், பீரோவில் இருந்த 2 ஜோடி கம்மல், மோதிரம் மற்றும் ரொக்கப்பணம் ரூ.1 லட்சம் ஆகியவை திடீரென திருடு போனது தெரிய வந்துள்ளது. எனவே, லட்சுமணன் இதுகுறித்து காயத்திரியிடம் கேட்டுள்ளார். அப்போது அவற்றை தான் திருடியதாக ஒப்புக் கொண்டாராம். அதில், ரூ.35 ஆயிரத்தை மட்டும் திரும்ப கொடுத்து விட்டு மீதிப் பணம், நகைகளை ஒரு மாதத்திற்குள் தந்து விடுவதாக தெரிவித்தாராம். ஆனால், சொன்னபடி தரவில்லையாம். எனவே, இதுகுறித்து லட்சுமணன் விருதுநகர் ஊரக காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காயத்திரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கஞ்சா விற்க முயன்ற இருவர் கைது
இராஜபாளையம், பிப்.23- இராஜபாளையத்தில் மேல்நிலைப் பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த இருவரை அந்த வழியாக ரோந்து சென்ற வடக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செல்வம் சோதனை செய்தார். அப்போது அவர்கள் இருவரும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் விசா ரித்த போது, அவர்கள் ஆவரம்பட்டி பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் முரளி(20). குமார் மகன் நிர்மல்(20) என்று தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீ சார், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 60 கிராம் கஞ்சா கைப்பற்றினர்.
பூட்டியிருந்த வீட்டில் நகை திருட்டு
ஸ்ரீவில்லிபுத்தூர், பிப்.23- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணா நகர் பகுதி யில் வசித்து வருபவர் குப்புசாமி. இவர் கடந்த பிப்.18 அன்று தனது மனைவியுடன் கோயம்புத்தூர் சென்றுள்ளார். சனியன்று அவரது வீட்டின் அருகில் வசித்து வரும் ராஜலட்சுமி என்பவர், அவரது வீட்டின் கதவு உடைக் கப்பட்டு பூட்டு வெளியில் கிடந்துள்ளதை கண்டு குப்பு சாமிக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் தன்னுடைய அலைபேசியில் உள்ள சிசி டிவி காட்சிகளை பார்த்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 3 மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து பீரோக்களை உடைத்து உள்ளதாகவும், பீரோவிலிருந்து 20.5 பவுன் நகை மற்றும் ரொக்கப் பணம் ரூ.80 ஆயி ரத்தை திருடி சென்று உள்ளனர் அவர் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் சார்பு ஆய்வாளர் சுந்தர்ராஜ் வழக்கு பதிந்து திருடிய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கஞ்சா விற்ற இளைஞர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர், பிப்.23- ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே காவல் சார்பு ஆய்வாளர் ஜோதி ரோந்து சென்ற போது இலந்தைக் குளத்தைச் சேர்ந்த ஈசாக் என்ற இளைஞர் பள்ளி அருகே கஞ்சா விற்றதை கண்டு பிடித்து இளைஞரை கைது செய்தார். அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து சிறையில் அடைக்கப்பட்டார்.
பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
நத்தம், பிப்.23- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் போலீஸ்- சப்-இன்ஸ்பெக்டர் அருள் குமார் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது ஆவிச்சிபட்டி பகுதியில் உள்ள மந்தையில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். பின்னர் அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் ஆவிச்சிபட்டியை சேர்ந்த பாலன்(31), அடைக்கன்(38), பூமி(45), பொன் னுச்சாமி(37), பிரபு (35), தனசேகரன் (32), கண்ணன் (39) என்பது தெரியவந்தது. இதையடுத்து நத்தம் போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், பணம் ஆகிய வற்றை பறிமுதல் செய்தனர்.
கேரளத்துக்கு புகையிலை பொருட்கள், கள்ளச்சாராயம் கடத்தல் மத்தியப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 15 பேர் கைது
தேனி, பிப். 23- போடியிலிருந்து கேரளத்துக்கு சனிக் கிழமை ஜீப்புகளில் சட்டவிரோதமாக 150 கிலோ புகையிலை பொருட்கள், கள் ளச்சாராயம் கடத்திய மத்தியப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 15 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். போடி முந்தல், போடிமெட்டு சோதனை சாவடிகளிலும், போடி இரட்டை வாய்க்கால் அருகிலும் போடி நகர், குரங்கணி காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அங்கு வந்த 6 ஜீப்புகளில் வடமாநில தோட்டத் தொழிலா ளர்கள் கேரளத்துக்கு சென்றது தெரிய வந்தது. 5 ஜீப்புகளில் வடமாநில தோட்டத் தொழிலாளர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்ததில் அதில் சட்டவிரோ தமாக புகையிலை பொருட்கள், ஒரு ஜீப்பில் தண்ணீர் பாட்டில்களில் சொந்தமாக தயாரித்த கள்ளச்சாராயமும் எடுத்துச் செல் வது தெரியவந்தது. இதனையடுத்து ஜீப்புகளில் பயணம் செய்த மத்தியப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த கிர்பால்சிங் (39), தீபக் உக்கி (31), சஞ்சய்குமார் (30), அம்ரித்குமார் (25), லலித் (19), பிரமோத் குமார் சாகு (29), வீரசே உக்கி (35), சிவம் பன்வாசி (26), லலித்குமார் தர்வையா (24), முகேஸ் தேகம் (27), அனிஷ் யாதவ் (29), துளசி ராம் துர்வே (40), அரவிந்த் மார்வி (22) ஆகிய 13 பேர் மீது போடி நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். இவர்களிடமிருந்து 124 கிலோ புகையிலை பொருட்கள், 4 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவற்றையும், 6 ஜீப்புகளையும் பறிமுதல் செய்து விசா ரிக்கின்றனர். மேலும் 2 பேர் கைது இதனிடையே ஞாயிறன்று போடி முந்தல் சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு ஜீப்பில் வடமாநில தோட்டத் தொழிலாளர்கள் ஒரு பெண் உள்பட 4 பேர் இருந்தனர். இவர்களை சோதனை செய்ததில் 2 பேரிடம் இருந்த பையில் 24 கிலோ புகையிலை பொருட்க ளும், தண்ணீர் பாட்டில்களில் 4 லிட்டர் கள்ளச் சாராயமும் இருந்தது தெரியவந்தது. இவர்களை உத்தமபாளையம் மது விலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதில் கள்ளச்சாராயம், புகையிலை வைத்திருந்ததாக மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த அமித் (30), ஆனந்தராஜ் (35) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிட மிருந்து ஜீப், 24 கிலோ புகையிலை பொருட்கள், 4 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகி யவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகிறார்கள்.
அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா
மானாமதுரை, இளையான்குடியில் ஆய்வு
மானாமதுரை, பிப்.23- சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சி, இளையான்குடி பேரூராட்சிப் பகு திகளில் அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வருபவர்களுக்கு பட்டா வழங்கு வது குறித்து மீன்வளம், மீனவர் நலத் துறை இயக்குநரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ரா.கஜலட்சுமி ஆய்வு செய்தார். மானாமதுரை நகராட்சியில் கிருஷ்ண ராஜபுரம் குடியிருப்பு, இளையான்குடி பேரூராட்சி கீழாயூர் பகுதிகளில் 10 ஆண்டு களுக்கும் மேலாக ஆட்சேபம் இல்லாத அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டி குடியிருந்து வரும் தகுதியானவர் களுக்கு வரன்முறை செய்து, பட்டா வழங்கும் பணிகள் தொடர்பாக அவர் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறையின் சார்பில், புதிய சிற்றுந்து திட்டத்தின் கீழ் மானாமதுரை அருகே முத்த னேந்தல், இடைக்காட்டூர், பாப்பாகுடி ஆகிய ஊராட்சிகள், வேலூர், சிப்காட் வழியாக மானாமதுரை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் வரை செல்லும் புதிய சிற்றுந்து வழித்தடம் தொடர்பாகவும் கண்காணிப்பு அலுவலர் கஜலட்சுமி நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சி யர் ஆஷா அஜித், மாவட்ட வருவாய் அலு வலர் செல்வசுரபி, மானாமதுரை வட்டாட்சி யர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட அரசு அலு வலர்கள் உடனிருந்தனர்.
அரசு பேருந்து மோதி தந்தை, மகள் பலி; மகன் படுகாயம்
ஒட்டன்சத்திரம், பிப்.24- வேடசந்தூர் அருகே அரசு பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் தந்தை, மகள் பலியாகி னர். மேலும் உடன் வந்த மகன் படுகாயமடைந்தார். திண்டுக்கல் மாவட்டம் அகரம் பேரூராட்சி காள ணம்பட்டியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (30) பொக்லைன் இயந்திர டிரைவர். இவர், இரு சக்கர வாகனத்தில் தனது மகன் அஸ்வந்த் (7), மகள் சாய் அஸ்மிதா (5) ஆகியோருடன் வேடசந்தூர் வந்து பள்ளிக்கு தேவையான பேனா, பென்சில் வாங்கினர். மீண்டும் தனது ஊருக்கு செல்வதற்காக ஞாயி றன்று காலை வேடசந்தூர் - திண்டுக்கல் நெடுஞ்சாலை யில் காக்காதோப்பூர் பிரிவுக்கு முன்பாக மாசம்மாள் மல்லம்மாள் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே போடிநாயக்கனூரில் இருந்து சேலம் நோக்கி சுருளிவேல் என்பவர் ஓட்டி சென்ற அரசு பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதி 20 அடி தூரம் இழுத்து சென்றது. இதில் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார். இரு சக்கர வாகனத்தில் முன்னால் அமர்ந்து வந்த அவரது மகள் சாய் அஸ்மிதா தலையில் பலத்த காயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். உடன் வந்த அவரது மகன் அஸ்வந்த் படுகாயத்துடன் மீட்கப்பட்டு திண்டுக்கல் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி கிராமங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கனடா நாட்டின் உரிமம் வாங்கித் தருவதாக ரூ.5.26 லட்சம் மோசடி ம.பி வாலிபர் கைது
தேனி, பிப்.23- கனடா நாட்டின் உரிமம் பெற்றுத் தருவதாக கூறி தேனி யைச் சேர்ந்த நபரிடம் ரூ.5.26 லட்சம் மோசடி செய்த மத்தியப்பிரதேச வாலிபரை சைபர் க்ரைம் காவல்துறை யினர் கைது செய்தனர். தேனியில் உள்ள பழைய அரசு மருத்துவமனை சாலையில் வசித்து வரும் கதிரவன் (34) என்பவர், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு வேலைக்கு ஆட்கள் அனுப்பும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தனது தொழிலை கனடா நாட்டிற்கும் விரிவுபடுத்தும் நோக்கில் கடந்தாண்டு அது தொடர்பான தகவல்களை இணையத்தில் தேடியுள்ளார். அதன் தொடர்ச்சியாக கதிரவனை தொடர்பு கொண்ட நபர், கனடா நாட்டின் உரிமம் பெற்றுத் தருவதாகவும், அதற்காக 5 லட்சத்துக்கும் அதிகமாக பணம் செலுத்த வேண்டும் எனவும், உரிமம் கிடைத்த பிறகு முதற்கட்ட மாக நீங்கள் 4 ஆட்களை கனடா நாட்டிற்கு அனுப்ப வேண்டும் எனக் கூறியுள்ளார். அதனை உண்மை என நம்பிய கதிரவன், அவர் தெரிவித்த வங்கிக் கணக்கிற்கு ரூ.5 லட்சத்து 26 ஆயி ரத்தை செலுத்தியுள்ளார். இதையடுத்து உரிமம் கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்பில் சம்பத்தப்பட்ட நபரை கதிரவன் தொடர்பு கொண்ட போது, முடியாததால் ஏமாற்றப்பட் டதை உணர்ந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட கதிர வன் கடந்த சில மாதங்களுக்கு முன் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய தேனி சைபர் க்ரைம் போலீசார், கதிரவன் பணம் செலுத்திய வங்கிக் கணக்கை ஆய்வு செய்ததில், மத்தியப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் மத்தி யப்பிரதேசம் விரைந்த தேனி சைபர் க்ரைம் காவல்துறை யினர், சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கில் தொடர்புடைய நபரின் கணவரான இந்தூர் மாவட்டம் கரோல் பாக் கிரா மத்தைச் சேர்ந்த 38 வயதான ராஜா எனத் தெரியவந்தது. அதன் பின்னர் இந்தூரில் இருந்த ராஜாவை கைது செய்த சைபர் க்ரைம் காவல்துறையினர் தேனிக்கு கொண்டு வந்த னர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய பிறகு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்த னர்.
ஆட்டுக் கொட்டகையில் தீப்பிடித்து 16 ஆடுகள் பலி
மதுரை, பிப். 23- மதுரை புதூர் எஸ். கொடிக்குளம் கண்மாய் மேற்கு தெருவை சேர்ந்தவர் நாச்சம்மாள் (70). இவரது கணவர் இறந்து விட்டார். தனியாக வசித்து வந்த இவர், 16 ஆடு களை வளர்த்து வந்தார். அவற்றை அந்த பகுதியில் உள்ள கண்மாயில் மேய்த்து விட்டு, அங்குள்ள ஆட்டு கொட்டகையில் அடைத்தி ருந்தார். சம்பவத்தன்று இரவு வெளிச்சத்துக்காக விள க்கை ஏற்றி வைத்து விட்டு வீட்டிற்கு வந்து விட்டார். காலையில் சென்று பார்த்தபோது, ஆட்டு கொட்டகை யில் தீப்பிடித்து அங்கிருந்த 16 ஆடுகளும் தீயில் கருகி பலியாகின. இதுகுறித்து நாச்சம்மாள் கே. புதூர் காவல்நிலை யத்தில் புகார் அளித்தார். காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
மதுரை. பிப்.23- மதுரை சுப்பிரமணியபுரம் 2-வது தெருவை சேர்ந்த வர் சரவணகுமார் (28). கட்டிட தொழிலாளியான இவ ருக்கு, குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இவர், அவ்வப்போது மதுகுடித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மனைவியை மிரட்டி வந்தார். சனிக்கிழமையன்று இரவும், தற்கொலை செய்து கொள்ள போவதாக மனைவியிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அறைக்குள் சென்ற சரவணகுமார், அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி அம்பிகா ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.