கும்பகோணம், பிப்.5 - கும்பகோணம் மாநக ராட்சி தேர்தலையொட்டி 34 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பொறுப்பிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆ. செல்வம் போட்டியிடுகிறார். இதனையொட்டி சிபிஎம் வேட்பாளர் செல்வத்திற்கு தேர்தல் கட்டணமான ரூ.4 ஆயிரத்தை கும்பகோணம் அனைத்துத் துறை ஓய்வூதி யர் சங்கம் ஏற்றுக்கொண்டு வழங்கியது. மேலும் தேர்தல் செலவின நிதிக்காக தொழிற் சங்க அரங்கங்கள், கட்சியி னர் நிதி வழங்கினர். சிபிஎம் மாவட்டச் செய லாளர் சின்னை.பாண்டியன், நகரச் செயலாளர் செந்தில் குமார், மாவட்ட குழு உறுப்பி னர் ஜீவபாரதி, ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜகோபாலன், துணைத் தலைவர் பழ.அன்புமணி, வட்ட செயலாளர் பக்கிரி சாமி, சிஐடியு மாவட்ட பொரு ளாளர் கண்ணன், 34 ஆவது வார்டு வேட்பாளர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.