கிருஷ்ணகிரி, ஜன. 14- ஓசூரிலுள்ள அரசு உதவி பெறும் புனித ஜான் போஸ்கோ மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா, ஆசிரியர் மெர்சி பணி ஓய்வு விழா, மாணவிகளுக்கு பரிசளிப்பு என முப்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்த பள்ளிக்கு தொடர்ந்து பல்வேறு வசதிகளை செய்து வரும் ஐவிடிபி தொண்டு நிறுவனத்தின் தலைவர் ராமன் மகசேசே விருதாளர் குழந்தை பிரான்சிஸ் கவுரவிக்கப்பட்டார். மேலும் தேசிய, மாநில, மாவட்ட அளவில் நடைபெற்ற விளை யாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு பரிசும், கேடயமும் வழங்கப்பட்டன. வழங்கியும் வாழ்த்திப்பேசினர். இதில் தாளாளர் ஏஞ்சலா, முதல்வர் nஜயந்தி, மாவட்ட கல்வி அலுவலர்கள் கோவிந்தன், முனிராஜ், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் இந்திராணி, தேவி, பாக்கியலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.