districts

ஓசூரில் குடியிருப்புக்கு பெரியார் பெயர்: பாஜக-அதிமுக எதிர்ப்பு முறியடிப்பு

கிருஷ்ணகிரி, மார்ச் 24- ஓசூர் மாநகராட்சியில் மக்கள் குடி யிருப்பு பகுதிக்கு பகுத்தறிவு தந்தை பெரியார்  பெயரை வைப்பதற்கு அதிமுக மற்றும் பாஜகவின் சங் பரிவார் அமைப்புகள் தெரிவித்த எதிர்ப்பு மாமன்ற கூட்டத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களால் முறியடிக்கப்பட்டது. ஓசூர் மாநகரில் உள் வட்ட சாலை யில் அமைந்துள்ள முனீஸ்வர் நகர், புதிய ஏஎஸ்டிசி குடியிருப்பு, துவாரகா நகர் உள்ளிட்ட 4000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள இப்பகுதிக்கு தந்தை பெரியார் சர்க்கிள் பெயர் வைக்க வேண்டும் என்று தொழி லாளர், முற்போக்காளர்கள், குடி யிருப்போர் நல சங்கத்தினர், திரா விடர் கழகத்தினர் உள்ளிட்டோர் 2010 முதல் தமிழ்நாடு அரசுக்கும், மாநகராட்சிக்கும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  2011 மற்றும் 2015 மே மாதத்தில் நக ராட்சியின் ஒப்புதலோடு இப்பகுதிக்கு ‘தந்தை பெரியார் சர்க்கிள்’என பெயர் வைப்பதற்கான  முயற்சி நடந்தது. அப்போது அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டி பெயர் சூட்டும் விழாவிற்கு வர சம்மதித்திருந்தார். இந்த நிலையில் அதிமுக உட்கட்சி பூசல் காரணமாக பெயர் சூட்டுவது நின்றுவிட்டது. அதன் பிறகும் இந்த கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டுக் கொண்டே இருந்தது. ஆளுங்கட்சி , எதிர்க்கட்சி மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தொடர்ந்து மனுக்கள் கொடுக்கப்பட்டு வந்தன. இதை யொட்டி மாநில அரசு, தந்தை பெரி யார் சர்க்கிள் என பெயர் சூட்டுவதற்கு அனுமதி அளித்து மாநகராட்சிக்கு ஆணை அனுப்பியுள்ளது. இந்நிலையில், இரு நாட்க ளுக்கு முன்பு நடந்த மாமன்ற கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் முன்வைக்கப்பட்டது. அப்போது பாஜக மற்றும் அதிமுக உறுப்பி னர்கள் சிலரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். பெரியார் பெயர் வைப்பதற்கு பெரும்பான்மை உறுப்பி னர்கள் ஆதரவு தெரிவித்தால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் தந்தை பெரியார் சர்க்கிள் பெயர் வைக்கும் தீர்மானம் நிறை வேறியது. இருப்பினும்  மாநகராட்சி தீர்மானத்தையும் ஜனநாயகத்தையும் மதிக்காமல் பாஜக, சங்பரிவார் அமைப்புகள் ஓசூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.