ஓசூர்,மார்ச் 26- கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் ஒன்றி யம் பெட்டமுகிலாலம் சாலை யில் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது எஸ். குருபட்டி. இங்கு 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தினமும் 300க்கும் மேற்பட்டவர்கள் வேலைக்காகவும் பிற பணி களுக்காகவும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பிரதான சாலைக்கும், தேன்கனிக்கோட்டைக்கும், ஓசூருக்கம் இரண்டு மூன்று முறைகள் சென்று வருகின்றனர். பிரதான சாலையிலி ருந்து எஸ்.குருபட்டி செல்லும் 1.5 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த சாலை 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. பழு தடைந்து ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியு மாக இரு சக்கர வாகனம் கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சந்தனபள்ளி ஊராட்சியிலும், அரசு அதி காரிகளிடமும் பலமுறை புகார் செய்தனர். இது வரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எஸ்.குருபட்டி சாலையை தார் சாலை யாக சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கெலமங்கலம் ஒன்றியச் செயலாளர் சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.