districts

img

மின் ஊழியர் மத்திய அமைப்பு ஓசூர் கோட்ட பேரவை

கிருஷ்ணகிரி, ஜூலை 4- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் ஓசூர் கோட்டப் பேரவை கே.எம்.ஹரிபட் நினைவரங்கில் நடைபெற்றது. கோட்டத் தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். உட்கோட்ட செயலாளர் சிவசங்கரன் வரவேற்றார். திட்ட செயலாளர் கருணாநிதி துவக்கி வைத்தார். கோட்டச் செயலாளர் பெரியசாமி வேலை அறிக்கையை சமர்ப்பித்தார்.  திட்டத் தலைவர் சதீஷ்குமார், பொருளாளர் முனுசாமி, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், துரை ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  கேங்மேன்களை சொந்த ஊர்களுக்கு பணி மாற்றம் செய்ய வேண்டும், ஓசூரில் பணிபுரியும் மின் ஊழியர்களுக்கு மாநகராட்சி வீட்டு வாடகை படி கொடுக்க வேண்டும், 2019-இல் முடிக்க வேண்டிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக முடித்து ஊதிய உயர்வை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தலைவராக ஜி.கே.ராஜேந்திரன், செயலாளராக சிவசங்கரன் தேர்வு செய்யப்பட்டனர்.