கரூர், மார்ச் 7 - மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பெண்களை சிறப் பிக்கும் வகையில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்க ளின் திறமைகளை வெளிக்கொ ணரும் வகையில், கரூர் மாவட்ட நீதி மன்ற வளாகத்தில் பெண் வழக்கறி ஞர்கள் மற்றும் நீதிமன்ற பெண் ஊழியர்களை சிறப்பிக்கும் வகை யில் மகளிர் தின போட்டிகள் நீதி மன்ற வளாகத்தில் நடைபெற்றன. மார்ச் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை தினந்தோறும் கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி, கோலப்போட்டி, கவிதைப் போட்டி உள்ளிட்ட பல்வேறு விளை யாட்டு போட்டிகள் ஒரு வாரமாக நடை பெற்றன. மாவட்ட நீதிமன்ற வளா கத்தில் மார்ச் 8 (செவ்வாய்க்கி ழமை) வெற்றி பெற்றவர்களுக்கு பரி சளிப்பு விழா நடைபெற உள்ளது. மகளிர் தின விளையாட்டு விழா விற்கு கரூர் மாவட்ட நீதிபதி எம். கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். போட்டிகளை தலைமை குற்றவி யல் நீதிபதி சி.ராஜலிங்கம், கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளர் மோகன்ராம், முதன்மை சார்பு நீதிபதி கோகுல் முருகன், கூடுதல் சார்பு நீதிபதி பாரதி, நீதித்துறை நடுவரின் 1 நீதிபதி அம்பிகா, கூடுதல் மகிளா நீதிபதி சரவணபாபு, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி உமா மகேஸ்வரி ஆகியோர் நடுவர்க ளாக இருந்து வெற்றி பெற்றவர் களை தேர்வு செய்தனர். தலைமை நிர்வாக அலுவலர் சத்திய நாராயணன்தாஸ், தமிழ் நாடு நீதித்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் வீரக்குமார், மாவட்ட செயலாளர் ரமேஷ், பொருளாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.