கரூர், நவ.27- தமிழக அரசு பட்டியல் வகுப்பு மற்றும் ஆதிதிரா விடர் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி யும் இன்று வரை நிலத்தை வழங்காத கரூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் கரூர் மாவட்டக்குழு சார்பில் மனு கொடுக்கும் போராட் டம் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத் தின் மாவட்டச் செயலாளர் இரா.முத்துச்செல்வன் தலைமை வகித்தார். மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப் பினர் பி.ராஜூ, கிருஷ்ணா புரம் ஒன்றியச் செயலாளர் தர்மலிங்கம், விதொச மாவட்டத் தலைவர் கண்ண தாசன், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தலைவர் சுப்பிரமணி யன், குளித்தலை ஒன்றிய செயலாளர் சிவா உள்ளிட் டோர் கலந்துகொண்டனர். பின்னர் குளித்தலை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் முரளிதரனிடம் 300 க்கும் மேற்பட்டவர்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தனர். இதுதொடர்பாக விதொச கரூர் மாவட்டச் செய லாளர் இரா.முத்துச் செல்வன் கூறுகையில், ‘‘கரூர் மாவட்டம், கிருஷ்ண ராயபுரம் வட்டம், சிந்தல வாடி ஊராட்சிக்குட்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 2000-2001 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத் துறை மூலம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால், பட்டா வழங்கிய பிறகு அந்த நிலத்தை அளந்து அத்துக்கல் நட்டு பயனாளிகளுக்கு வழங்கா மல் ஏமாற்றி விட்டனர்.
பிறகு 2017-ல் அந்த பட்டாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் அதே ஊராட்சியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 2017-ல் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப் பட்டது. ஆனால், 2017-ல் வழங்கிய பட்டாவிற்கான நிலத்தையும் அளந்து அத்துக் கல் நட்டு பயனாளிகளுக்கு வழங்காமல் 5 ஆண்டு காலமாக கரூர் மாவட்ட நிர்வாகம் மக்களை ஏமாற்றி வருகிறது. எனவே, இப்பிரச்சனை யில் தமிழக அரசு உடனடி யாக தலையிட்டு சிந்தல வாடி ஊராட்சி நிர்வாகம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்காக உள்ள 10 ஏக்கர் நிலத்தை அளந்து அத்துக்கல் நட்டு உடனடி யாக உரிய பயனாளி களுக்கு வழங்க வேண்டும். 2017-ல் மீண்டும் பட்டா வழங்கும் போது 2000-2001 ஆண்டு பட்டா வழங்கப் பட்ட தகுதியான சில குடும்பங்கள் விடுபட்டு உள்ளன. விடுபட்ட குடும்பங் களுக்கும் பட்டா வழங்க வேண்டும். சிந்தலவாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் மனு அளித்த 15 தினங்களுக்குள் இலவச பட்டாவை வழங்க, கரூர் மாவட்ட நிர்வாகமும் குளித்தலை வருவாய் நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.