கரூர், ஜூன் 15 - கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியம் பாகநத்தத்தில் தமிழக அரசின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை சுமார் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வரு கின்றனர். மஞ்சாநாயக்கன்பட்டி, செல்வாநகர், கிளிநீக்கல் பாறை, பாக நத்தம், ஆவூதிபாளையம், ஏரிமேடு உள்ளிட்ட பல்வேறு குக்கிராம பகுதி களில் இருந்து மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருகின்றனர்.
ஆபத்தான நிலையில் பள்ளி கட்டிடம்
பாகநத்தம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியின் கட்டிடம், ஓடுகள் உடைந்து, கை மரங்கள் தொங்கிய படி உள்ளன. சுவர்கள் எப்போது கீழே விழும் என்ற அச்சத்துடனே மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இந்த சேதமடைந்த பள்ளி கட்டிடம் பள்ளியின் நுழைவு வாயிலில் உள்ளது. உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் இந்த கட்டிடத்தை கடந்து தான், பள்ளி வகுப்பறைகளுக்கு தினமும் மாணவர்கள் செல்ல வேண்டி யுள்ளது. இந்த ஆபத்தான கட்டிடத்தால் மாணவ, மாணவிகளுக்கு எவ்வித உயிர்சேதமும் ஏற்படும் முன்பு கரூர் மாவட்ட கல்வித்துறையும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவ டிக்கை எடுத்திட வேண்டும் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இப்பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் அருகில் உள்ள இ-சேவை மைய கட்டிடத்தில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் நடந்து வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி களை கள ஆய்வு செய்து, பள்ளி களில் உள்ள ஆபத்தான, தரமற்ற கட்டிடங்களை அப்புறப்படுத்த தமிழக முதல்வரும், கல்வித்துறையும் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளனர். ஆனால் கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட கல்வி அலுவலர் இது போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளை மேற் கொள்ளாமல் அலட்சியமாக செயல் படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரி வித்துள்ளனர்.