districts

img

குளத்தை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

நாகப்பட்டினம், ஜுலை 13- நாகப்பட்டினம் ஒன்றியம் வடுகச்சேரி ஊராட்சி வடக்குதெருவில் உள்ள திருவிழா குளத்தில் ஆகாயத்தாமரை மண்டி தண்ணீர் தெரியாத அளவிற்கு உள்ளது.  தற்போது காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு ஆங்காங்கே குளங்களில் சேமித்து வைக்கப்படுகிறது. குளத்தில் ஆகாயத்தாமரை மண்டி கிடப்பதால், குளத்து நீரை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. அடுத்து வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், மழைநீரை சேமித்து வைப்பதற்கு, குளத்திலுள்ள ஆகாய தாமரைகளை அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கு பயன்பட்டு வந்த இந்த குளம் முழுவதும் ஆகாயத்தாமரை மண்டி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குறிப்பாக கால்நடைகள் தண்ணீரின்றி சிரமப்படுகின்றன. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் அப்பகுதி மக்கள் பயன்பெறுவர். நடவடிக்கை எடுக்கப்படுமா?