கரூர், பிப்.16 - திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கரூர் மாவட்டம் புகளூர் நகராட்சி 22 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் இந்துமதி அரவிந்திற்கு அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்திலும், கூட்டணியின் மற்ற கட்சி வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும் வாக்குக் கேட்டு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி வேலாயுதம்பாளையம் ரவுண்டானா பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மொஞ்சனூர் ரா.இளங்கோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் எம்.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம், திமுக கரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சேகர் (எ) குணசேகரன், புகளூர் நகர செயலாளர் சாமிநாதன், காகிதபுரம் பேரூர் கழக செயலாளர் தங்கராசு, சிபிஎம் கரூர் ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன், மாதர் சங்கம் அன்னகாமாட்சி, திமுக காமராஜ், சோமு ஜோதி, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.