districts

img

மார்ச் 28, 29 வேலை நிறுத்தத்தை ஆதரித்து கரூர் பேருந்து நிலையங்களில் ஆர்ப்பாட்டம்

கரூர், மார்ச் 19 - தொழிலாளர் சட்டத்தொகுப்பு கள் நான்கையும் கைவிட வேண்டும்.  மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். புகலூர் காகித ஆலையை பொதுத்துறையாக பாது காத்திட வேண்டும் என வலியுறுத்தி யும், ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக வும் அனைத்து தொழிற்சங்கங்கள், தொழில் வாரி சம்மேளனங்கள் சார்பில் மார்ச் 28, 29 ஆகிய இரண்டு  நாட்கள் 48 மணிநேர அகில இந்திய  பொது வேலை நிறுத்தம் நடைபெறு கிறது.  இதனையொட்டி கரூர் ஆர்.எம்.எஸ் தபால் அலுவலகம், பள்ளப் பட்டி கனரா வங்கி, குளித்தலை தபால்  நிலையம், தோகைமலை, தரகம் பட்டி, கிருஷ்ணராயபுரம் ஆகிய பேருந்து நிலையங்கள்  முன்பு மார்ச் 28 ஆம் தேதி மறியல் போராட் டமும், 29 ஆம் தேதி ஆர்ப்பாட்டமும் நடைபெறுகிறது. போராட்டத்தை விளக்கி காகித ஆலை எல்பிஎப் தொழிலாளர் சங்கம்,  டிஎன்பிஎல் காண்ட்ராக்ட் தொழிலா ளர் முன்னேற்ற சங்கம் சார்பில்  வேலாயுதம்பாளையம் கடைவீதி யில் கோரிக்கை விளக்க தெருமுனை  கூட்டம் நடைபெற்றது. எல்பிஎப் சங்க மாவட்ட தலைவர் வி.ஆர்.அண்ணவேலு தலைமை வகித்தார்.  சிஐடியு மாவட்ட தலைவர் ஜி. ஜீவானந்தம் சிறப்புரையாற்றினார்.  எல்பிஎப் மாவட்ட செயலாளர் பழ. அப்பாசாமி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கரூர் ஒன்றிய செய லாளர் ராஜேந்திரன், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் அ.காதர் பாட்சா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.  புகளூர் நகராட்சி  வார்டு கவுன்சிலர்கள், சங்க நிர்வாகி கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து  கொண்டனர்.