கரூர், பிப்.6 - திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கரூர் மாநக ராட்சி 41 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பா ளர் எம்.தண்டபாணிக்கு ஆதரவாக 41 ஆவது வார்டுக்குட்பட்ட அசோக் நகர் நான்கு ரோட்டில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக் கூட்டத்திற்கு திமுக 41 ஆவது வார்டு செயலாளர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி வேட்பாளர் தண்டபாணிக்கு ஆதர வாக அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தில் வாக்கு சேகரித்து சிறப்புரை யாற்றினார். கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட செய லாளர் மா.ஜோதிபாசு, திமுக தாந்தோணி தெற்கு நகர செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் பொதுக்கூட்டத்தில் பேசினார்.