கரூர், ஜூலை 7- தமிழ்நாடு முதல்வர் சென்னை தலைமை செயலகத்தி லிருந்து காணொலிக் காட்சி வாயிலாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரியை துவக்கி வைத்தார். நிகழ்வையொட்டி அரவக்குறிச்சி சமுதாய கூடத்தில் (தற்காலிகம்) புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர் பங்கேற்றார். நிகழ்ச்சியில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி, கரூர் வருவாய் கோட்டாட்சியர் பா. ரூபினா, பள்ளப்பட்டி நகராட்சி தலைவர் முனைவர் ஜான், அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவர் ஜெயந்தி, பள்ளப்பட்டி நகராட்சி துணைத் தலைவர் பசீர்அகமது, அரவக்குறிச்சி வட்டாட்சியர் ராஜசேகர், அரவக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி, அரவக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ், அரவக்குறிச்சி பேரூராட்சி துணைத் தலைவர் தங்கராஜ் மற்றும் உள் ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.