கரூர், நவ.29- அரவக்குறிச்சி அருகே 70 ஆண்டுகள் பழமையான வீடு இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்குள் சிக்கி மூதாட்டி ஒருவர் உயிரிழந் தார். கரூர் மாவட்டம் அரவக் குறிச்சி பழைய மார்க்கெட் கடைவீதி பகுதியில் குடியி ருந்து வருபவர் பாத்திமா பீவி (74). இவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதன் பின்னர் பாத் திமா பீவி தனியாக வசித்து வந்தார். இவருக்கு மூன்று மகள்கள், மூன்று மகன்கள் உள்ளனர். 70 ஆண்டுகள் பழமை யான வீடு என்பதால், ஆறு மாதத்திற்கு முன்பு வீட்டை இடிப்பதற்கு பிள்ளைகள் திட்டமிட்டனர். ஆனால் பாத்திமா பீவி, தான் இருக் கும் வரை வீட்டை இடிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதால், வீட்டை இடிக்காமல் விட்டுவிட்டனர். இந்நிலையில் செவ் வாய்க்கிழமை காலை வீட் டின் அருகே குப்பைகளை கொட்டி விட்டு, பாத்திமா பீவி வீட்டிற்குள் வந்தபோது, எதிர்பாராத நேரத்தில் திடீ ரென வீடு இடிந்து விழுந்தது. இச்சம்பவம் குறித்து அப் பகுதி பொதுமக்கள் காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இரண்டு பொக்லைன் இயந் திரங்களை கொண்டு கட்டிட இடிபாடுகளை அகற்றி மூதாட்டியை உயிருடன் மீட் கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் 25 பேரும், காவல் துறையினர் 30 பேரும் தீவிர மாக ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் நேரில் இடிந்து விழுந்த வீட்டினை பார்வையிட்டு, மூதாட்டி யை மீட்கும் பணியை தீவி ரப்படுத்த உத்தரவிட்டார். சுமார் 3 மணி நேர போராட் டத்திற்கு பிறகு, மூதாட்டி பாத்திமா பீவியை மீட்டு பரி சோதித்த போது, அவர் உயிரி ழந்தது தெரிய வந்தது. பின் னர் அவரது உடலை கூராய் வுக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.